நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், ஆஃப்கானிஸ்தான் அணியும் மோதுகின்றன.
அபுதாபியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஹசரத்துல்லாஹ் ஜாசை (2), முகமது ஷாஜத் (4), ரஹ்மத்துல்லாஹ் குர்பாஷ் (6) மற்றும் குல்பதீன் நைப் (15) ஆகியோர் ஏமாற்றம் கொடுத்ததால் ஆஃப்கானிஸ்தான் அணி 56 ரன்கள் மட்டுமே எடுத்த போது 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.
இதன்பின் களத்திற்கு வந்த நஜிபுல்லாஹ் ஜட்ரன் நீண்ட நேரமாக போராடி 48 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் பெரிதாக ரன் குவிக்க தவறியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்துள்ள ஆஃப்கானிஸ்தான் அணி 124 ரன்கள் எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதே போல் டிம் சவுத்தி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மிட்செல் சாட்னரை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.