ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதுகின்றன.
ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டிக்கான ஸ்காட்லாந்து அணியில் மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், மைக்கெல் லீஸ்க், ஜாஸ் டேவே, சப்யான் சரீப் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல் இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணியில் குல்பதீன் நயீப், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய போட்டிக்கான ஆஃப்கானிஸ்தான் அணி;
ஹசரத்துல்லாஹ் ஜாஜை, முகமது ஷாஜத், ரஹ்மானுல்லாஹ் குர்பாஷ், அஸ்கர் அஃப்கான், நஜிபுல்லாஹ் ஜர்டான், முகமது நபி (கேப்டன்), குல்பதீன் நைப், ரசீத் கான், கரீம் ஜனத், நவீன் உல் ஹக், முஜிபுர் ரஹ்மான்.
இன்றைய போட்டிக்கான ஸ்காட்லாந்து அணி;
ஜார்ஜ் முன்சி, கெய்ல் கூட்செர், மேத்யூ கிராஸ், ரிச்சி பெர்ரிங்டன், காலும் மெக்லெட், மைக்கெல் லீஸ்க், கிரிஸ் க்ரீவெக்ஸ், மார்க் வாட், ஜோஸ் டேவிஸ், சஃப்யான் ஷரீப், பிராட்லி வீல்.