இந்திய நட்சத்திர வீரர் கே.எல் ராகுல் கிரிஸ் கெய்ல் குறித்து புகழ்ந்து கூறியுள்ளார். மேலும், அவர் தான் டி20யின் சிறந்த வீரர் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது,
எங்கள் பஞ்சாப் அணியைப் பொறுத்தவரை இது ஏமாற்றமான தொடர். நாங்கள் ‘பிளே-ஆப்’ சுற்றில் நெருக்கமாகத் தோற்றோம். ஆனால் தனிப்பட்ட முறையில், பேட்டிங்கில் எனக்கு மிகச் சிறப்பான தொடர் இது. நான் நன்றாக, எனது இயற்கையான ஆட்டத்தை ஆடினேன். நாங்கள் இயல்பாக ஆடுவதற்கு சேவாக் தொடர்ந்து ஊக்குவித்தார். முதல் போட்டியிலிருந்து நாங்கள் அதைத்தான் செய்தோம்.
Photo by: Rahul Gulati /SPORTZPICS for BCCI
பஞ்சாப் அணியின் உரிமையாளர்களும் என் மீது நம்பிக்கை வைத்து அதிக தொகைக்கு ஏலம் எடுத்திருந்தார்கள். அந்தத் தொகைக்கு நியாயம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது. ஒட்டுமொத்தமாக எனது பேட்டிங் எனக்கு மிகவும் திருப்தி அளித்தது.
இந்த ‘யுனிவர்ஸ் பாசிடம்’ இருந்து கற்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன, குறிப்பாக அவர் விளாசும் சிக்சர்களில். கெய்லுடன் இணைந்து பேட்டிங் செய்ததும், அணிக்கு அதிரடியான தொடக்கம் தந்ததும் மறக்க முடியாதவை. களத்துக்கு வெளியே பார்ட்டி, கொண்டாட்டம் என்று தூள் கிளப்புபவர் அவர்.