பன்ட் இல்லாதது ஆச்சரியம் அளிக்கிறது: சுனில் கவாஸ்கர்

12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா உள்பட 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கான இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் அதன் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் மும்பையில் நேற்று பிற்பகலில் நடந்தது. முன்னதாக தேர்வு குழு தலைவரை, கேப்டன் விராட்கோலி சந்தித்து பேசினார்.

தேர்வு குழு கூட்டம் முடிவில் உலக கோப்பை போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் இடம் பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் இது தொடர்பாக கூறுகையில், ‘ரிஷப் பந்த் நல்ல பார்மில் இருக்கிறார். ஐ.பி.எல். போட்டியில் மட்டுமின்றி அதற்கு முந்தைய போட்டிகளிலும் பேட்டிங்கில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அத்துடன் விக்கெட் கீப்பிங்கிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறார். அவரை உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்காதது ஆச்சரியம் அளிக்கிறது’ என்றார்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தோனி விளையாடாத நிலையில் தினேஷ் கார்த்திக் சிறந்த விக்கெட் கீப்பராக இருப்பார் என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறும் உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் தோனிக்கு அடுத்து 2-வது விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் இருவரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக்குக்கு தேர்வாளர்கள் வாய்ப்பளித்துள்ளனர்.

இந்த நிலையில் தினேஷ் கார்திக் தேர்வு குறித்து சுனில் கவாஸ்கர் கூறும்போது, “போட்டியின்போது தோனியால் உடல் நிலை சரியில்லாமல் இருந்து விளையாட முடியாமல் போனால் உங்களுக்கு சிறந்த முறையில் கீப்பிங் செய்யும் ஒருவர் தேவைப்படுவார். எனவே தினேஷ் கார்திக் சிறந்த விக்கெட் கீப்பர் என்று நான் நினைக்கிறேன். அவர் அந்த இடத்துக்கு தகுதியானவர்” என்று குறிப்பிட்டார்.

மேலும் உலகப் கோப்பை அணியில் ரிஷப் பந்த் இடம்பெறாமல் போனது குறித்து,” ரிஷப் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கும்போது இந்த முடிவு எனக்கு சிறிது ஆச்சரியத்தை அளித்தது. அவர் சிறப்பான பேட்டிங் செய்துக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.