இந்தியாவில் 2008ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் இதுவரை 13 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. தற்போது 14வது ஐபிஎல் சீசன் ஏப்ரல் 9 முதல் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 முறையும், கொல்கத்தா 2 முறையும், ராஜஸ்தான், டெக்கான், ஹைதராபாத் அணிகள் 1 முறையும் கோப்பைகளை வென்று இருக்கிறது.
இந்த வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மட்டும் இதுவரை ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. ஆனால் பெங்களூர் ஆண்டுதோறும் நாங்கள் சிறந்த அணியுடன் இருக்கிறோம். எனவே இந்த முறை கண்டிப்பாக கோப்பையை வெல்வோம் என்று கூறிவருவது. அந்தவகையில் இந்த முறையும் ஆர்சிபி அணி இதை கூறியிருக்கிறது. முதல் போட்டியில் மும்பை அணியுடன் வெற்றி பிறகு கோலியும் இதை சொல்லியிருக்கிறார்.
இதனால் கொல்கத்தா அணிக்காக இரண்டு முறை கோப்பைகளை வென்று தந்த கவுதம் கம்பீர் இதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில் “பெங்களூர் அணியில் கெவின் பீட்டர்சன், கோலி, கிறிஸ் கெயில் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடியும் இதுவரை கோப்பை வெல்லவில்லை. வலுவான வீரர்களை கொண்டு வலுவான அணியாக இருக்கும் பெங்களூர் அணி களத்தில் சிறப்பாக விளையாடுவது முக்கியம்.
தற்போது கோலி, டீவில்லாயர்ஸுடன் அதிரடி பேட்ஸ்மன் மேக்ஸ்வெல் இணைந்திருக்கிறார். 13 சீசன்களாக பேசிக்கொண்டே இருக்கும் பெங்களூர் களத்தில் நன்றாக விளையாடினால் தான் ஜெய்க்க முடியும். கெய்ல், பீட்டர்சன் ஆகிய உலகத்தரம் வாய்ந்த வீரர்களை வைத்தும் கூட ஹோம் மைதானத்தில் தோல்வி அடைந்து இருக்கின்றனர். ஆர்சிபியில் மிகப்பெரிய தவறு ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன்” என்று கவுதம் கம்பீர் கூறியிருக்கிறார்.