அடுத்த தொடருக்கான அணி அறிவிப்பு! அணியில் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் கீப்பர்!

விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான தமிழக அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் மிக முக்கிய வலிமை வாய்ந்த அணியாக தமிழக அணி விளங்குகிறது தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் சார்பில் இந்த அணி வழி நடத்தப்பட்டு வருகிறது இந்நிலையில் இந்த வருடத்திற்கான விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருக்கும் இந்த அணியில் இந்திய ஆல்ரவுண்டர் விஜய் சங்கர், இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், டெஸ்ட் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட முரளிவிஜய் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
அதனை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜெகதீசன் இந்திய அணிக்கு ஒரு காலத்தில் துவக்க வீரராக களமிறங்கிய அபினவ் முகுந்த், இந்தியாவின் இளம் வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பிடித்துள்ளன.ர் அதனை தாண்டி ஐபிஎல் தொடரில் விளையாடி உள்ள முருகன் அஸ்வின் மற்றும் டி நடராஜன் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.
விஜய் ஹசாரே டிராபிக்கான தமிழ்நாடு அணி
தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், அபிநவ் முகுந்த், என் ஜெகதீசன், பி பராஜித், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், கங்கா ஸ்ரீதர் ராஜு, ஹரி நிஷாந்த், பிரதோஷ் ரஞ்சன் பால், எஸ் லோகேஸ்வர், கே முகுந்த், முரளி விஜய், டி. அபிஷேக் தன்வார், ஜே கவுசிக், ஆர் சாய் கிஷோர், எம் சித்தார்த் மற்றும் முருகன் அஸ்வின்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி இருக்கிறார்  தினேஷ் கார்த்திக்.

ஐபிஎல் கிரிக்கெட் அணியான கோல்கத்தா நைட் ரைடர்சின் தலைவராக இருக்கும் தினேஷ் கார்த்திக், பிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் உள்ளார்.

கோல்கத்தா அணியின் உரிமையாளரான ஷாருக்கான், கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்கும் டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

இந்நிலையில், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணி ஆடிய போட்டியைக் காண முன்னாள் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்கலமுடன் அந்த அணியின் சீருடையை அணிந்துகொண்டு் சென்றுள்ளார் தினேஷ் கார்த்திக்.

ஆனால் இதற்காக இவரோ அல்லது கோல்கத்தா அணி நிர்வாகமோ பிசிசிஐயிடம் முறையான அனுமதி பெறவில்லை.

இந்நிலையில், டிரின்பேகோ அணி வீரர்களின் அறையில் கார்த்திக் இருக்கும் புகைப்படங் களைப் பார்த்த பிசிசிஐ, “ஒப்பந்தப் பட்டியலில் இருந்து உங்களை ஏன் நீக்கக்கூடாது?” என விளக்கம் கேட்டு தினேஷ் கார்த்திக்கிற்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து, கார்த்திக் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், “பிசிசிஐயின் அனுமதி பெறாமல் அங்கு சென்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி அந்த அணி தொடர்பான எவ்வித செயல்பாடுகளிலும் பங்கேற்க மாட்டேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.