குழந்தைகளுக்கு வரலாற்றை சொல்லிக்கொடுங்கள், புனிதத்தை அல்ல! சமூக நீதி தத்துவத்தை அழகா பேசும் சங்ககாரா!

நிறவெறிக்கு எதிராக உண்மையான மாற்றம் வர வேண்டுமெனில் உண்மையான வரலாற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டுமே தவிர அதன் புனிதப்படுத்தப்பட்ட பக்கங்களைச் சொல்லிக் கொடுத்து பயனில்லை என்று இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் போலீஸ் அராஜகத்தில் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம் முதலாக ‘கருப்ப உயிர்கள் முக்கியம்’ போராட்டம் உலகெங்கும் உயிர் பெற்றது.

இந்நிலையில் நிறவெறிக்கு எதிராகப் பேசிய குமார் சங்கக்காரா, “படித்திருக்கிறோமா அல்லது இல்லையா என்பது ஒரு பிரச்சினையே அல்ல, ஏனெனில் நன்றாகப் படித்தவர்கள் செய்யும் மோசமான குற்றங்களைப் பார்த்திருக்கிறேன்.

மதிப்புசார் கல்வி இல்லாமல் போனால், அறநெறி, நீதிபோதனைகள் இல்லாத கல்வி என்பது பயனற்றது. கல்வி நம் முன் அனுமானங்களை, முன் தீர்ப்புகளை தீர்க்கவல்லது அல்ல. மாறாக கல்வி இதனை நல்ல முறையில் வாதம் செய்யவே உதவும்.

நிறவெறியில் பலவிதங்கள் உண்டு, வெறும் தோல் நிறம் மட்டும் காரணமல்ல. நாம் இன்று கருப்பர் வாழ்க்கை முக்கியம் போன்ற போராட்டங்களைப் பார்க்கும்போது கல்வி என்பது குழந்தைகளுக்கு உண்மையான வரலாற்றைச் சொல்லிக் கொடுப்பதாக இருக்க வேண்டும் என்பதை உணர்கிறோம். மாறாக புனிதமயமாக்கப்பட்ட கல்வியை போதிக்கக் கூடாது. மொத்தமான குணாம்சம் மீது நாம் வெளிச்சம் பாய்ச்சி நல்லது, கெட்டது, மோசமானது என்பதைப் போதிக்க வேண்டும்.

உண்மையான வரலாறு என்பதை தெரிந்து கொண்டு விட்டால், நம் அணுகுமுறையில் மாற்றம் வரும். நாம் தான் அனைத்து நாகரீகஙளுக்கும் மூலம் அனைத்து நாகரீகங்களின் பலன்களும் நாம் தான் என்று கருதுவதை விடுத்து உண்மைக்கு முன் நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இதுதான் சக்தி வாய்ந்த பாடமாக அமையும்.

ஒரே இரவில் மாற்றம் வந்து விடாது. ஏதோ போராட்டம் நடத்தி விட்டு ஓய்ந்து விடும் விஷயமல்ல இது. மிகவும் பொறுமையுடன் கடினமான பாதையில் செல்ல வேண்டிய விவகாரம் இது” என்றார் சங்கக்காரா.

Mohamed:

This website uses cookies.