அதிர்ச்சி செய்தி! பயோ பப்புளை விட்டு வெளியே சென்ற 6 வீரர்கள்! பிசிசிஐ புகார்! டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்குமா?

நாளை நடக்க இருக்கின்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரிட்சை மேற்கொள்ள தயாராக இருக்கின்றன. இறுதிப் போட்டியில் விளையாடிய இந்திய அணி வீரர்கள் நியூசிலாந்துக்கு கடந்த ஜூன் மாதம் மூன்றாம் தேதி வந்தனர்.

சவுத்தாம்டனில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் அனைத்து வீரர்களும் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அந்த ஹோட்டல் மைதானத்துக்கு உள்ளேயே இருப்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து வீரர்களும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்த ஹோட்டலில் வந்து தங்கி இருக்கிறார்கள்.

இந்நிலையில் போல்ட், சவுத்தீ, நியூசிலாந்து அணியின் பிசியோ உட்பட 6 பேர் மைதானத்துக்கு அருகில் உள்ள கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாடி கொண்டு இருப்பதைக் கேள்விப்பட்ட இந்திய அணி நிர்வாகம் ஐசிசி மேலதிகாரியிடம் அறிவித்தது.

வீரர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று கூறிய ஐசிசி

இந்நிலையில் வீரர்கள் தனிமை காலம் முடிந்தவுடன் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம் என்று தற்போது கூறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை விளையாடு வதற்கு முன்பாகவே நியூசிலாந்து அணி வீரர்கள் அனைவரும் தனிமை காலத்தில் இருந்திருக்கிறார்கள். எனவே அவர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று ஐசிசி கூறியுள்ளது.

மேலும் பேசிய ஐசிசி மேலதிகாரி, இந்திய வீரர்களும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் வரை எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக சென்று வரலாம் என்றும் கூறியுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி முடிந்தவுடன் ஆகஸ்ட் மாதம் தான் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கப்படும். எனவே கிட்டத்தட்ட ஒரு மாத காலம் இந்திய வீரர்கள் இங்கிலாந்தில் இருக்கப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளை இந்திய நேரப்படி 3:30 மணி அளவில் இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப்போட்டி ஆரம்பிக்கப்படும். இறுதிப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் ஒளிபரப்பாக போகிறது. இந்திய ரசிகர்கள் அனைவரும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கண்டுக் களிக்கலாம்.

Prabhu Soundar:

This website uses cookies.