வீரமும் இருக்கு, நெஞ்சில் ஈரமும் இருக்கு… தென் ஆப்ரிக்காவில் நிரூபித்த இந்திய அணி !!

வீரமும் இருக்கு, நெஞ்சில் ஈரமும் இருக்கு… தென் ஆப்ரிக்காவில் நிரூபித்த இந்திய அணி

தென் ஆப்ரிக்காவின் கேப்டவுனில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க தென் ஆப்ரிக்காவிற்கு இந்திய அணி ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி செய்துள்ளது.

தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது.

இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி.20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி வரலாறு படைத்தது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியும், கடைசி டி.20 போட்டியும் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவின் வராற்று சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்றான கேப்டவுனில், கடந்த சில மாதங்களாக கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதன் காரணமாக அங்கு நடைபெற இருந்த பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.  மேலும் தண்ணீர் பஞ்சத்தால் அப்பகுதி மக்கள் கேப்டவுனை விட்டும் வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில் கேப்டவுனில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை  போக்குவதற்கு பல தொண்டு நிறுவனங்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வரும் நிலையில், இந்திய அணி தென் ஆப்ரிக்காவிற்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து தனது பங்களிப்பை செய்துள்ளது.

இதற்கான காசோலையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, தென் ஆப்ரிக்காவின் கேப்டன் டூபிளசிஸடம் வழங்கினார்.

வீரத்துடன் தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடரை கைப்பற்றிய இந்திய அணி, தென் ஆப்ரிக்காவின் முனனேற்றத்திற்கும் உதவி செய்துள்ளதை, இந்திய, தென் ஆபிர்க்கா ரசிகர்கள்  உள்பட ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

Mohamed:

This website uses cookies.