புதிய வித கோட் அணிந்து ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்ட இந்திய அணி!

நவம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை அன்று இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் மிக நீண்ட தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா பெறப்பட்டிருக்கிறது. முன்னதாக இந்திய அணி வீரர்கள் பலர் ஐபிஎல் தொடரில் விளையாடிக்கொண்டிருந்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்ததால் ஐபிஎல் தொடரில் விளையாடாத வீரர்கள் செட்ஸ்வார் புஜரா, ஹனுமா விஹாரி மற்றும் பயிற்சியாளர் குழு ஆகிய அனைவரும் தொடர் முடிவதற்கு முன்பாக துபாய் சென்று விட்டனர்.

அங்கிருந்து நேரடியாக அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலியாவிற்கு புறப்பட்டனர். இது தொடர் துவங்குவதற்கு மூன்று வாரங்கள் முன்னதாகவே மூன்று விதமான போட்டிகளிலும் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது. பல இளம் வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். காயம் காரணமாக ரோகித் சர்மா அணியிலிருந்து நீக்கப்பட்டு இருந்தார் தற்போது அவர் டெஸ்ட் ஒருநாள் டி20 ஆகிய அனைத்து அணிகளும் சேர்க்கப்படும் விட்டார்.

அதே நேரத்தில் தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர், தங்கராசு நடராஜன் ஆகியோரும் டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். இஷாந்த் ஷர்மா காயத்தில் இருந்து மீண்டு விட்டதால், டெஸ்ட் தொடருக்கு வந்து அணியில் இணைந்து கொள்வார். இவ்வாறு பல செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் வைரஸ் கட்டுப்பாடு காரணமாக ஒவ்வோர் முறையும் இந்திய அணி வீரர்கள் வித்தியாசமான வைரஸ் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டுதான் சென்றனர். ஆனால் இந்த முறை இந்திய அணியின் ஜெர்சி நிறத்திலேயே ஒரு மிக நீண்ட கோட் ஒன்று அவர்களுக்கு தரப்பட்டிருக்கிறது இந்த உடை புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த ஜெர்ஸியின் கலரில் இருக்கிறது. இதனை அணிந்து கொண்டு தான் உயிர் பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருப்பார்கள் என்றும் தெரியவந்திருக்கிறது.

இந்திய – ஆஸ்திரேலிய தொட்ருக்கான முழு அட்டவணை


1 வது ஒருநாள்: சிட்னி (நவ. 27)
2 வது ஒருநாள்: சிட்னி (நவ. 29)
3 வது ஒருநாள்: கான்பெர்ரா (டிச. 2)

1 வது டி 20: கான்பெர்ரா (டிசம்பர் 4)
2 வது டி 20: சிட்னி (டிசம்பர் 6)
3 வது டி 20: சிட்னி (டிசம்பர் 8)

1 வது டெஸ்ட்: அடிலெய்ட் (டிசம்பர் 17-21)
2 வது டெஸ்ட்: மெல்போர்ன் (டிசம்பர் 26-30)
3 வது டெஸ்ட்: சிட்னி (ஜன. 7-11, 2021)
4 வது டெஸ்ட்: பிரிஸ்பேன் (ஜன. 15-19)

Prabhu Soundar:

This website uses cookies.