ஆஸ்திரேலியா தொடருக்காக இந்திய அணி பயிற்சி செய்ய புதிய மைதானத்தை தேர்ந்தெடுத்த பிசிசிஐ!

கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உலகில் எந்த ஒரு இடத்திலும் கிரிக்கெட் போட்டியில் விளையாடப்படாமல் இருந்தது. 117 நாட்கள் கழித்து தற்போது இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

 இந்த டெஸ்ட் தொடர் அவ்வளவு எளிதாக நடை பெற்று விடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பாகவே வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று விட்டது. தனி விமானத்தில் சென்று அங்கு கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் ஒவ்வொரு வீரரும் தனிமையில் இருந்தார்கள்.

 தனிமையில் இருந்த பின்னர் ஒவ்வொரு வீரருக்கும் இரண்டு முறை கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுக்கப்பட்டது .இந்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதியானவர்கள் மட்டுமே தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடினார்கள்.

 சமீபத்தில் கூட இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் பாதுகாப்பு விதிகளை மீறியதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு விதிமுறைகள் கடுமையாக கடைபிடிக்கப் பட்டு வருகிறது.

 இந்நிலையில் இந்திய வீரர்கள் ஒன்றாக சேர்ந்து வரும் தொடர்களுக்கு இங்கு பயிற்சி செய்வது என்ற கேள்வி எழுந்து வந்தது. நேற்று கங்குலி தலைமையிலான உயர்மட்டக் கூட்டம் கூடியது. இதில் இந்திய வீரர்கள் பயிற்சி செய்ய இரண்டு மைதானத்தை தேர்ந்தெடுக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. ஒன்று பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ஒன்று அகமதாபாத்தில் தற்போது கட்டப்பட்டு  மொடாரா மைதானம்.

 

 இந்த இரண்டு மைதானங்களில் ஒன்றில்தான் இந்திய வீரர்கள் பயிற்சி செய்வார்கள். பெங்களூரு அணியை தேர்ந்தெடுக்க முடியாது ஏனெனில் அங்கு கூட்ட நெரிசல் அதிகம் அகமதாபாத் மைதானத்தை இதற்காக தேர்ந்தெடுக்கலாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது .இனி வரப்போகும் டெஸ்ட் தொடருக்கு இங்குதான் இவர்கள் ஒன்றாக பயிற்சி செய்வார்கள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

Mohamed:

This website uses cookies.