இந்திய அணி டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் , 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இந்த மிக நீண்ட தொடர் 2 மாதங்கள் நடைபெற போகிறது. ஒருநாள் தொடரில் நவம்பர் 27 மற்றும் 29ம் தேதிகளில் அதைத்தொடர்ந்து டி20 தொடர் நடைபெறும். டெஸ்ட் தொடர் டிசம்பர் 17ம் தேதி முதல் ஜனவரி 19-ம் தேதி முதல் இடைவெளிவிட்டு நடத்தப்படும்.
இதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்று இருக்கிறது. வழக்கமாக, எப்போதும் இந்திய அணி அணிந்திருக்கும் ஜெர்சியை மாற்றாமல் எப்போதும் விளையாடிக் கொண்டிருக்கும். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தொடருக்கு தொடர் தங்களது ஜெர்சி வண்ணத்தில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டு வந்து கொண்டே இருப்பார்கள். பார்ப்பதற்கும் நன்றாக இருக்கும்.
இந்திய அணி நான்கு அல்லது ஐந்து வருடத்திற்கு ஒரு முறை தான் தங்களது ஜெர்சியை மாற்றுவார்கள். குறிப்பாக நைக் நிறுவனம்தான் இத்தனை ஆண்டுகால ஸ்பான்சராக இருந்தது. அந்த நிறுவனம் வடிவமைத்து கொடுக்கும் ஜெர்சியை இந்திய அணி அணிந்து கொண்டு இருந்தது. 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடருக்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் இந்திய கொடி நிறத்தில் ஒரு ஜெர்சி வந்தது, அதன் பின்னர் அப்போதில் இருந்து தற்போது வரை பெரிய மாற்றம் இல்லாமல் ஒரே மாதிரியான ஜெர்சி தான் அணிந்து கொள்ளப்பட்டு விளையாடப்பட்டு கொண்டிருக்கிறது
இந்நிலையில் 90களில் இந்திய அணி அணிந்து விளையாடிய ஜெர்சி தற்போது மீண்டும் கொண்டு வரப்பட்டிருக்கிற.து கீழே புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஜெஸ்ஸி தான் ஆஸ்திரேலிய தொடருக்கான இதர்சி ஆக அமையும் இதனை இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறது.