கங்குலி பதவியில் திடீர் மாற்றம்.. உச்சநீதிமன்றம் சென்ற பிசிசிஐ!

கங்குலியின் பதவிக்காலத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர பிசிசிஐ முடிவு செய்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்காக காத்திருக்கிறது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, முன்னதாக பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்த உச்சநீதிமன்றத்தின் லோதா கமிட்டி புதிய பிசிசிஐ தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலை நடத்தியது.

இதில் கங்குலி ஒருவர் மட்டுமே விண்ணப்பித்திருந்தார். இதனால் எவ்வித போட்டியும் இன்றி பிசிசிஐ புதிய தலைவராக கங்குலி தேர்வு செய்யப்பட்டு, அக்டோபர் மாதம் 23ஆம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

கங்குலி தலைவர் பொறுப்பேற்ற பிறகு, பிசிசிஐ நிர்வாகத்தில் லோதா கமிட்டி கொண்டுவந்த திட்டங்களில் பல மாற்றங்களை செய்துவருகிறார். மேலும், உள்ளூர் போட்டிகளில் இருக்கும் வடிவமைப்புகளை மாற்றுவதற்காக ஆலோசனையையும் மேற்கொண்டு வருகிறார்.

அடுத்ததாக, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டியை கொண்டுவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

அதாவது, உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களின் கீழ் அதன் அதிகாரிகளின் பதவிக்காலத்தை கட்டுப்படுத்த பிசிசிஐ முடிவு செய்தது. அந்தவகையில் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் ஒன்பது மாத காலத்தை மேலும் அதிகரிக்க  இவ்வாறு வழிவகுத்துள்ளது.

இந்த முடிவு BCCI-யின் 88-வது ஆண்டு பொதுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. எனினும் இதை செயல்படுத்த உச்சநீதிமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படும். இதுதொடர்பாக தகவல் அளித்து, ஒரு உயர் அதிகாரி, முன்மொழியப்பட்ட அனைத்து திருத்தங்களுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இப்போது அவை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் பிசிசிஐ தரப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

பிசிசிஐ செய்து வரும் இந்த மாற்றத்திற்கு லோதா கமிட்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. இருப்பினும் உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தால், 2024 ஆம் ஆண்டு வரை கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பில் தொடர வாய்ப்புள்ளது.

Prabhu Soundar:

This website uses cookies.