ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷாவை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இளம்வயதிலேயே அதிரடியாக விளையாடுகிறார் என்று இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் வட்டாரத்திலும் வெகுவாக பாராட்டை பெற்ற இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா, சிறப்பாக விளையாடுவார் என்று நம்பிக்கை வைத்து கடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி வாய்ப்பளித்தது.
ஆனால் ப்ரீத்தி ஷா தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை, தனது சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அனுபவம் இல்லை என்பதை காட்டும் வகையில் மிகவும் மோசமாக விளையாடினார் இதன் காரணமாக அடுத்த போட்டியிலேயே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் இதையெல்லாம் பிரித்வி ஷா கருத்தில்கொள்ளாமல் தன்னுடைய கடினமான பயிற்சியின் மூலம் அடுத்தடுத்து நடைபெற்ற ஐபிஎல் தொடர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதன் காரணமாக இந்திய அணியின் கிரிக்கெட் தேர்வாளர்கள் குழு இவர் மீது மீண்டும் நம்பிக்கை வைத்து இந்திய அணியில் வாய்ப்பு அளித்தது, ஆனால் தற்பொழுது இந்திய அணி எதிர்கொள்ளவிருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பிரித்வி ஷாவிர்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் 22 வயதாகும் இளம் வீரர் பிரித்வி ஷாவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெகுவாக பாராட்டியுள்ளார்.
அதில் பேசிய அவர், பிரித்வி ஷா இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சேவாக் போன்று ஒரு ஆக்ரோஷமான வீரர், சேவாக் கிரிக்கெட் நுணுக்கங்களை அறிந்த ஒரு வீரர், அவர் போட்டியை எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது நன்கு அறிந்தவர், இதன் காரணமாகவே இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷேவாக்கை எனக்கு மிகவும் பிடிக்கும்,அவர் என்னுடைய ஃபேவரைட் வீரர், எப்படி சேவாக் சிறப்பாக செயல்பட்டாரோ அதேபோன்று பிரித்விஷாவும் சிறப்பாக செயல்படுவார் அவரை நாம் நம்ப வேண்டும். பிரித்வி ஷா ஒரு இளம் வீரர், நாம் அவரிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது ஆனால் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் கொடுத்து அவரை ஒரு சிறந்த வீரராக உருவாக்க வேண்டும் என்று மைக்கல் கிளார்க் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.