டெஸ்ட் போட்டிக்கான தரவரிசை பட்டியலினை ஐசிசி வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன் தர வரிசையில் விராட்கோலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடருக்கு பிறகு, ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜாக் லீச் நைட் வாட்ச்மேனாக களமிறங்கி 92 ரன்கள் அடித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்திருக்கிறார்.
இதனால், இவர் 57 இடங்கள் முன்னேறி 117 ஆவது இடத்தை பெற்றுள்ளார். இரண்டு இன்னிங்சிலும் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட இளம் ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் பேட்டிங், பௌலிங் மற்றும் ஆல்ரவுண்டர் தரவரிசை மூன்றிலும் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்.
சாம் கர்ரன் பேட்ஸ்மேன் தர வரிசையில் தற்போது 52 வது இடம் பெற்றிருக்கிறார். ஆல்ரவுண்டர் வரிசையில் 23வது ரேங்க் பெற்றுள்ளார்.
இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய ஸ்டூவர்ட் பிராட் 18 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதேபோல் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ் எவ்வித மாற்றமுமின்றி 33 வது இடத்தில் நீடிக்கிறார்.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியை 85 ரன்களுக்கு சுருட்ட முக்கிய காரணமாக இருந்த அயர்லாந்து வீரர் டிம் முர்டாக் 25 இடங்கள் முன்னேறி 41 வது ரேங்க் பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 922 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார் அதற்கு அடுத்தடுத்த இடங்களில் கேன் வில்லியம்சன் மற்றும் புஜாரா இருவரும் உள்ளனர்.
அயர்லாந்திற்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பிய ஜோ ரூட் , 6வது இடத்தில இருந்து 7வது இடத்திற்கு பின்னேறினார். அதேபோல வார்னர் தற்போது 6வது இடத்தை பெற்றுள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசை
ரேங்க் | ஆட்டக்காரர் | புள்ளிகள் | |
---|---|---|---|
1 | விராட் கோலி (இந்தியா) | 922 | |
2 | கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து) | 913 | |
3 | சேதேஸ்வர் புஜாரா (இந்தியா) | 881 | |
4 | ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) | 857 | |
5 | ஹென்றி நிக்கோல்ஸ் (நியூசிலாந்து) | 778 | |
6 | ஜோ ரூட் (இங்கிலாந்து) | 763 | |
7 | டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) | 756 | |
8 | ஐடன் மார்க்ராம் (தென்னாப்பிரிக்கா) | 719 | |
9 | குயின்டன் டி கோக் (தென்னாப்பிரிக்கா) | 718 | |
10 | ஃபாஃப் டு பிளெசிஸ் (தென்னாப்பிரிக்கா) | 702 |
.