டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்.. தொடமுடியாத உச்சத்தை தோட்ட இந்திய அணி!

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என்ற தொடரின் கீழ் இரு நாடுகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிய இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்று 120 புள்ளிகளை பெற்றது.

இதற்கு அடுத்ததாக தென்ஆப்பிரிக்க அணியுடனான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடியது. இதில் முதல் போட்டியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. புனேவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியது.

அதற்கு அடுத்ததாக இன்று முடிந்த, ராஞ்சியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தென்னாப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதன் மூலம் இத்தொடரில் 120 புள்ளிகள் என மொத்தம் 240 புள்ளிகளுடன் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதல் இடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் 60 புள்ளிகளுடன் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் இருக்கின்றன.  தலா 56 புள்ளிகளுடன் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. தென்னாப்பிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இதுவரை புள்ளிகளில் ஏதும் எடுக்கவில்லை.

Shahbaz Nadeem gets the final wicket of Anrich Nortje and Proteas are bundled out for 162,

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்:

நிலை அணி தொடர் விளையாடியது உடன் வென்றது வரையப்பட்ட லாஸ்ட் டைட் புள்ளிகள் போட்டியிட்டன PCT தொடர் வென்றது RpW விகிதம் * மொத்த புள்ளிகள்
1. இந்தியா 1 4 4 0 0 0 200 1.000 1 2,600 200
2. நியூசிலாந்து 1 2 1 0 1 0 120 0,500 0 1,401 60
3. இலங்கை 1 2 1 0 1 0 120 0,500 0 0,714 60
4. ஆஸ்திரேலியா 1 5 2 1 2 0 120 0,467 0 1,158 56
5. இங்கிலாந்து 1 5 2 1 2 0 120 0,467 0 0,864 56
6. மேற்கிந்திய தீவுகள் 1 2 0 0 2 0 120 0,000 0 0,411 0
7.  தென்னாப்பிரிக்கா 0 2 0 0 2 0 80 0,000 0 0,305 0
8. வங்காளம் 0 0 0 0 0 0 0 பொ / இ 0 பொ / இ 0
9. பாக்கிஸ்தான் 0 0 0 0 0 0 0

 

Prabhu Soundar:

This website uses cookies.