அதிக பணம் கிடைக்கும் ஐபிஎல் தொடரை விட எனக்கு இது தான் முக்கியம்; இந்திய வீரர் உறுதி !!

காயம் காரணமாக அவதிப்பட்டுக் கொண்டிருந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் சமீபமாக நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான டி20 போட்டியிலிருந்து மீண்டும் விளையாடத் தொடங்கினார்.

அதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்கு கொள்ளாமல் இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கிய புவனேஸ்வர் குமார் தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கினார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, டெஸ்ட் போட்டிகளுக்கு தான் முன்னுரிமை கொடுப்பதாக தெரிவித்துள்ளார், இவர் 2018 ஆம் ஆண்டு சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் பங்கு கொள்ளவில்லை. 2013 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய புவனேஸ்வர் குமார் 21 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 63 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.அதன்பின் இவரை இந்திய அணி டெஸ்ட் போட்டிக்காக பயன்படுத்தவில்லை.

மேலும் டெஸ்ட் போட்டிகளில் பும்ரா முகமது சமி இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் மூன்று வருடங்கள் டெஸ்ட் போட்டியில் பங்கெடுக்காத இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியதாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்கு நான் முன்னுரிமை கொடுப்பேன்,மேலும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்ய தயாராக உள்ளேன் மேலும் வருகிற ஐபிஎல் போட்டியில் டெஸ்ட் போட்டியை கவனத்தில் கொண்டு எனது பணிச்சுமையை கவனமாக கையால்வேன் என்று தெரிவித்திருந்தார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 போட்டி மற்றும் ஒருநாள் போட்டிகளில் இவர் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் புவனேஸ்வர் குமார் விளையாடவில்லை, ஆனால் இந்த ஆண்டு நிச்சயம் விளையாடுவார் இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகச்சிறந்த ஒரு அணியாக வலம்வரும்.மேலும் இந்த ஆண்டு கோப்பையை வெல்லும் வாய்ப்பு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு அதிகமாக உள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Mohamed:

This website uses cookies.