டெஸ்ட் போட்டிகள் அழிந்து விட கூடாது; விராட் கோஹ்லி !!

டெஸ்ட் போட்டிகள் அழிந்து விட கூடாது; விராட் கோஹ்லி

டெஸ்ட் போட்டிகள் ஒருபோதும் அழியாது, அழிந்து விடவும் கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் டெஸ்ட் போட்டிகளுக்கான வரவேற்ப்பும் ஆதரவும் குறைந்து கொண்டே வருகின்றது. டெஸ்ட் போட்டிகளுக்கான ஆதரவை அதிகரிக்க ஐ.சி.சி., உள்பட ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் வாரியமும் பல்வேறு கட்ட முயற்சிகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகள் ஒரு போதும் அழிந்துவிட கூடாது என இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்..

இது குறித்து பேசிய விராட் , “டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதே தனித்துவம் வாய்ந்தது. ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதை விட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது மிகவும் சவாலானது. டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் கிடைக்கும் மகிழ்ச்சியும் உற்சாகத்தையும் வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. தனித்துவம் மிக்க டெஸ்ட் போட்டிகள் ஒரு போதும் அழிந்துவிடாது என்று நம்புகிறேன், டெஸ்ட் போட்டிகள் அழிந்து விடவும் நாம் விட்டு விட கூடாது என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

கோஹ்லிக்கு கேல் ரத்னா விருது;

விராட் கோலி, மீராபாய் சானு ஆகியோருக்கு ராஜிவ்காந்தி கேல்ரத்னா விருதுகள் உள்பட அர்ஜுன, துரோணாச்சார்யா, தயான்சந்த், விருதுக்குரியவர்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்தது. 2 வீரர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா, 20 வீரர்களுக்கு அர்ஜூனா, 8 பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று நடைபெற்ற விழாவில் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

விளையாட்டுத் துறையில் சிறப்பாக சாதனை புரிந்து நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல்ரத்னா, அர்ஜுனா விருதுகள் மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, கிரிக்கெட் வீரர் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகியோருக்கு இன்று வழங்கப்பட்டது.

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருtஹைப் பெற்ற, மணிப்பூர் இம்பால் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை 23 வயது மீராபாய் சானு, 48 கிலோ பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தையும், காமன்வெல்த் போட்டியில் தங்கமும் வென்றார். முன்னாள் வீராங்கனை குஞ்சுராணியிடம் பயிற்சி பெறும் மீராபாய் சானு, கடந்த 2014-ம் ஆண்டு கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2017 நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற உலக பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் அவர் தகுதி பெற்றாலும் தோல்வியைத் தழுவினார். இதற்கிடையே கோல்ட்கோஸ்ட் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவில் 196 கிலோ தூக்கி புதிய சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

Mohamed:

This website uses cookies.