நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு : பென் ஸ்டோக்ஸ் அணியில்

Cricket, England, West Indies, ICC, Ben StokesCricket, England, West Indies, ICC, Ben Stokes

 

இங்கிலாந்து அணி மார்ச் மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 0-4 என இழந்தது. இதன்பின், 5 ஒரு நாள், 3 ‘டுவென்டி-20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடர் முடிந்தபின், நியூசிலாந்து செல்லும் இங்கிலாந்து அணி 5 ஒரு நாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான, 16 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.Cricket, England, Australia, Ashes, Ben StokesCricket, England, Australia, Ashes, Ben Stokes

மீண்டும் வாய்ப்பு:

இதில், ‘ஆல்-ரவுண்டர்’ பென் ஸ்டோக்ஸ் இடம்பிடித்துள்ளார். கடந்த செப்டம்பரில் மது போதையில் மற்றொரு நபருடன் சாலையில் இவர் மோதலில் ஈடுபட்டார். இதனால், வழக்குபதியப்பட்டதால் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இடம்கிடைக்கவில்லை. இதற்கான விசாரணை நடந்துகொண்டிருக்கும் நிலையில், மீண்டும் ஸ்டோக்சிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மற்றபடி, காயத்திலிருந்து மீண்டுள்ள மார்க் வுட், மொயீன் அலி, வின்சி, ஸ்டோன்மேன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வழக்கம்போல, ஜோ ரூட் அணியை வழிநடத்துகிறார்.

The England’s Test skipper is also regarded as one of the modern-day greats of the game, and when it comes to Test cricket, Root is a class apart.

டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார். அத்துடன், டெஸ்ட் போட்டியில் 24 வயதான லியாம் லிவிங்ஸ்டோன் அறிமுகமாகிறார். மேலும், காயத்திலிருந்து மீண்டு வந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து அணி வீரர்கள் விவரம் வருமாறு:

ஜோ ரூட் (கேப்டன்), மொயின் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேரிஸ்டோ, ஸ்டுவர்ட் பிராட், அலிஸ்டார் குக், மேசன் கிரேன், பென் போக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், டேவிட் மெலான், கிரெய்க்  ஒவர்டோன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மென், ஜேம்ஸ்  வின்ஸ், கிரிஸ் வோக்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் அடங்கிய 16 வீரர்கள் கொண்ட பட்டியல்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Editor:
whatsapp
line