வேகத்தை மாற்றி மாற்றி வீசினேன்: சகால்!!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சமனில் முடிந்தது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா வரலாற்று வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நடந்த ஒருநாள் தொடரையும் தற்போது 2-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. தொடரின் முதல் ஆட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. இரண்டாவது போட்டியை இந்தியா வென்றது. இதனால் இன்று நடந்த மூன்றாவது போட்டி, கோப்பையை வெல்லும் அணியை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி ஆனது.

இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பீட்டர் ஹண்ட்காம்ப் 58 (63), ஷான் மார்ஸ் 39 (54), உஸ்மான் காவஜா 34 (51) ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் சுழற்பந்துவீச்சாளர் சாஹல் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். அவர் தவிர, புவனேஷ்குமார் மற்றும் முகமது ஷமி தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 9 (17) ரன்களில் அவுட் ஆனார். பின்னர் வந்த கோலியுடன் கைகோர்த்த தவான் 23 (46) ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து கோலியும் 46 (62) ரன்களில் அரை சதம் அடிக்காமல் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் கேதர் ஜாதவ் இருவரும் இறுதிவரை அவுட் ஆகாமல் 87 (114) மற்றும் 61 (57) ரன்களை எடுத்த வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்து தன் அதிரடி ஆட்டத்தை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் தோனி.

தொடர் யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் மற்றும் கேரே தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேப்டன் ஃபின்ச் 14 ரன்னிலும், உஸ்மான் கவாஜா 34, ஷான் மார்ஷ் 39 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பேக் டு பெவிலியன் திரும்பினர்.

அந்த அணியில் அதிகபட்சமாக பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் 58 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். பின்னர் 48‌.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்‌தது. இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் 6 விக்கெட்களை கைப்பற்றினார். மேலும் புவனேஷ்வர் குமார், முகமது சமி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இதனையடுத்து 231 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா 9 ரன்னிலும், தவான் 23 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். எனினும் வெற்றியை நோக்கி இந்திய அணி நிதானமாக விளையாடி வெற்றி கனியை பறித்தது.

இதனிடையே இந்திய அணியின் சிறந்த கேப்டனாக திகழ்ந்த தோனி, தனது கேப்டன் பதவியை உதறி தள்ளி, டெஸ்ட் போட்டிகளிகளும் விடைபெற்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறார்.

தோனி அக்டோபரில் இருந்து சரியாக விளையாடவில்லை எனவும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவர் பெயர் இடம்பிடிக்க, பல்வேறு கேள்விகள் எழுப்பப்படும் எனவும் கிரிக்கெட் வட்டாரங்களில் செய்திகள் பரவின.

இந்நிலையில் தோனி தன்னை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் ஏற்கனவே இரண்டு முறை அரைசதம் அடித்த தோனி, தற்போது இன்று நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் அரைசதம் அடித்து விளாசியுள்ளார். தோனி 87 ரன்களுடன் களத்தில் இருந்ததால் ரசிகர்கள் உற்சாகத்தில் கொண்டாடி வருகின்றனர்.வ்

Sathish Kumar:

This website uses cookies.