தான் எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் என்று தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது பயிற்சியாளராக காணப்படும் தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட்,தான் விளையாடிய காலகட்டத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த பலருக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர்.
மிக எளிதாக 140 kmph வேகத்தில் பந்து வீசக்கூடிய திறமை படைத்த ஆலன் டொனால்ட் மொத்தம் 72 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 164 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 330&272 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
1991 தென் ஆப்பிரிக்க அணிக்கு சர்வதேச போட்டியில் விளையாட துவங்கி 2003 வரை தென் ஆப்பிரிக்க அணிக்காக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் 55வயாதகும் ஆலன் டொனால்ட் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக தெரியப்படுத்தி வருகிறார்.அதில், தான் எதிர்கொண்ட சிறந்த மூன்று பேட்ஸ்மேன்கள் குறித்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டெக்னிக்கலாக நான் எதிர்கொண்ட சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர் தான், சச்சின் உள்ளூர் தொடராக இருந்தாலும் வெளிநாட்டு தொடராக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் தன்னை தயார்படுத்திக்கொண்டு பந்துவீச்சாளர்களை மிகவும் லாவகமாக கையாள்வார், தென்னாப்பிரிக்கா மைதானத்தில் அவர் விளையாடும் பொழுது அதற்கு ஏற்றார்போல் சிறப்பாக செயல்படுவார், அவரை ட்ரிக்கர் செய்ய நினைத்தால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மிகவும் அற்புதமாக பேட்டிங் செய்து அசத்துவார், கிட்டத்தட்ட சச்சின் அனைத்து நாடுகளிலும் தன்னுடைய சதத்தை பதிய வைத்துள்ளார் என்று சச்சின் குறித்து ஆலன் டொனால்ட் தெரிவித்திருந்தார்.
மேலும் பேசிய அவர், சச்சின் தவிர்த்து இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களில் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரையன் லாரா மற்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் ஆகிய இருவரும் தான், ஆனால் இவர்களைவிட சச்சின் டெண்டுல்கர் தான் நான் எதிர்கொண்ட பேட்ஸ்மேன்களில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்று ஆலன் டொனால்ட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.