இதற்கு பிறகு  ஒவ்வொரு நாளும் மிக மோசமாக இருந்தது; மனம் திறந்த விராட் கோஹ்லி !!

இதற்கு பிறகு  ஒவ்வொரு நாளும் மிக மோசமாக இருந்தது; மனம் திறந்த விராட் கோஹ்லி

உலகக் கோப்பைப் போட்டி தோல்விக்குப்பின் விடிந்த ஒவ்வொரு காலைப்பொழுதும் எங்களுக்கு மோசமாகவே இருந்தது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டியில் லீக் ஆட்டங்களில்சிறப்பாகச் செயல்பட்டு முதலிடம் பிடித்த இந்திய அணி, அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறியது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப்பின் மீண்டும் தனது கிரிக்கெட் பயணத்தை இன்று முதல் தொடர்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 டி20, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. முதலாவது டி20 போட்டி இன்று  அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், லாடர்ஹில் நகரில்  நடக்கிறது.

இந்த  போட்டிக்கு முன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மே.இ.தீவுகளுக்கு எதிரான இந்த தொடர் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு. அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது, ரிஷப் பந்த் தன்னுடைய அனைத்து திறமைகளையும், கட்டற்ற வகையில், வெளிப்படுத்த இது சரியான வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.

ரிஷப்பந்துக்கு எவ்வளவு திறமை இருக்கிறது என்பதை நாங்கள் அறிவோம், அவர் களத்தில் நிலைத்து நின்று நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறோம்.தோனியின் அனுபவம் அணிக்கு எப்போதும் மிகப்பெரிய காரணியாக இருக்கும், ஆனால், இந்த நேரத்தில், இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர இது சரியான வாய்ப்பாக இருக்கும்” என்றார்.

Mohamed:

This website uses cookies.