கே.எல் ராகுலின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருபவர் கேஎல் ராகுல்.

கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் மூலம் அறிமுகமான கேஎல் ராகுல் தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் வெகு சில வருடங்களிலேயே இந்திய அணியில் இடம் பிடித்தார்.

2013- 2014 ஆம் ஆண்டு ரஞ்சித் தொடரி கர்நாடக அணிக்காக விளையாடிய கேஎல் ராகுல் அந்த ஒரே தொடரில் 1033 ரன்கள் அடித்து மாஸ் காட்டினார்.

ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார் ராகுல் கடந்த 2014 -2015 ஆண்டுகளில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாவே அணிகளுக்கிடையேயான போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் தனக்கான இடத்தை பதிவு செய்தார்.

இந்திய அணியில் இவருக்கான எதிர்காலம் பிரகாசமாக உள்ளது என்று அனைவராலும் பாராட்டப்பட்ட நிலையில் ராகுல் சில போட்டிகளில் சொதப்பியதால்  கடந்த சில மாதங்களாக இந்தி டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் பெற்று வந்தார்.

அதிரடி ஆட்டக்காரரான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரில் தனது அதிரடி பாம்பிற்கு திரும்பினார் அசுர வேகத்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்த ராகுல் தான் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியானவன் அல்ல என்பதை நிரூபித்தார்.

இதன் பிறகு இந்தியா ஒரு நாள் மற்றும் டி.20 போட்டிகளில் இடம்பிடித்துள்ள ராகுல் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்றார்.

விளையாட்டில் மட்டுமல்லாமல் விளம்பரங்கள் மாடலிங் போன்றவற்றில் இருந்தும் வருவாய் ஈட்டி வரும் கேஎல் ராகுல் சராசரி ஆண்டு வருவாய், மற்றும் சொத்து மதிப்பு குறித்து இங்கு பார்ப்போம்.

சராசரி சொத்து மதிப்பு 12 கோடி
ஆண்டு வருமானம் 3 கோடி
விலை உயர்ந்த கார்கள் – 4 2.5 கோடி
வீடு – 1 65 லட்சம்

 

குறிப்பு; இது சராசரியான கணக்கு மட்டுமே

 

Mohamed:

This website uses cookies.