இந்த நேரத்தில் உலகில் கிரிக்கெட்டின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் முன்னணி துவக்க வீரர்களில் ஒருவராக திகழ்பவர் ரோஹித் ஷர்மா. கடந்த 4-5 ஆண்டுகளில் இந்தியாவின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் துவக்க வீரராக நல்ல ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். கிரிக்கெட் ஆடுகளத்தில் அவரது செயல்திறன் அவரை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு செல்ல உதவியது என்பதில் ஆச்சரியமில்லை.எனவே இந்த கட்டுரை மூலம், நாம் ரோஹித் ஷர்மா நிகர மதிப்பு என்ன என்பதை காண இருக்கிறோம்.
2007 ஆம் ஆண்டில் ரோஹித் சர்வதேச அளவில் அறிமுகமானார். இருப்பினும், அவரது முரண்பாட்டின் காரணமாக அணியில் அவரது இடத்தை உறுதிப்படுத்த 5 முதல் ஆறு ஆண்டுகள் வரை எடுத்துக் கொண்டார். ஒரு நல்ல ஆட்டத்தை வெளிபடுத்திய அடுத்த போட்டியிலேயே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததால் இவரின் மீது அணி நிர்வாகத்திற்கு இன்றளவும் நம்பிக்கை இல்லாமல் இருந்தது.
அதுவரை 6வது 7வதாக கலமிறங்கிவந்த ரோஹித், ஒருநாள் போட்டிகளில் இன்னிங்ஸ் துவக்க வாய்ப்பு அளிக்கப்பட்ட பின்னர் அவருக்கு அனைத்தும் மாறியது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரோஹித் சர்மாவை துவக்க ஆட்டகரராக களமிறங்கிய பின்னர் இந்தியாவின் தலைசிறந்த வெற்றிக்கு உதவினார். பின்னர் அவர் ஆஸ்திரேலியாவில் பந்துவீச்சை நான்கு பக்கங்களிலும் சிதரடித்து, 209 ரன்கள் குவித்து இரட்டை சதத்தை பதிவு செய்தார், ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் மூன்றாவது இரட்டை சதம் இது.
ரோஹித் ஷர்மா
ஒரு வருடம் கழித்து, எட்வின் கார்டன்ஸில் இலங்கைக்கு எதிராக 173 பந்துகளில் 264 ரன்களை அவர் எடுத்ததான் மூலம் ஒருநாள் போட்டிகளில் இரண்டு இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றார். 2015 உலகக் கோப்பையில், இந்தியாவின் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரர் ஆவார். 2017 ல், ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் மற்றொரு இரட்டை சதத்தை அடித்தார், இதனால் ஒருநாள் போட்டியில் 3 இரட்டை சதம் விளாசி, நம்பமுடியாத சாதனையைப் பெற்ற முதல் மற்றும் ஒரே ஒரு வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், டி20 போட்டிகளில் மூன்று சதங்களை அடித்த ஒரே இந்திய வீரர் ஆவார்.
ரோஹித் ஷர்மா
இந்திய பிரீமியர் லீக்கில் ரோஹித் ஆட்டம் மிக சிறப்பாக உள்ளது. 2017 ல், ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மூன்று சாம்பியன்ஸ் பட்டங்களை வென்ற முதல் கேப்டனாக ஆனார். டெக்கான் சார்ஜர்ஸ் தற்போது இல்லாத நிலையில், ஒரு வீரர் என்ற பெயரில் இது அவருக்கு அவரது நான்காவது பட்டமாகும்.
இந்தியாவில் ஃபோர்ப்ஸ் நிறுவனம், 2015 ஆம் ஆண்டின் சிறந்த 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டது, அதில் புகழ் பெற்றவர்களில் ரோஹித் 8 வது இடத்தையும், வருமானம் அடிப்படையில் 46 வது இடத்தையும், மொத்தம் 12 வது இடத்தையும் பெற்றார்.
இப்போது, ரோஹித் ஷர்மாவின் நிகர மதிப்பு $ 18.7 மில்லியன் ஆகும். கடந்த சில ஆண்டுகளில் ரோஹித் ஷர்மாவின் நிகர மதிப்பு 26% அதிகரித்துள்ளது. அவரது வருவாயின் ஆதாரம் போட்டிக்கான கட்டணம், ஒப்புதல்கள், சொத்து, ஐபிஎல் ஒப்பந்தம் மற்றும் பி.சி.சி.ஐ. ஒப்பந்தம் ஆகும்.
ரோஹித் ஷர்மாவின் நிகர மதிப்பு:
மதிப்பீட்டு நிகர மதிப்பு | ரூ .124.5 கோடி |
ஆண்டு சராசரி சம்பளம் | ரூ .11.5 கோடி |
பிராண்ட் ஒப்புதல்கள் | ரூ .7.2 கோடி |
தனிப்பட்ட முதலீடுகள் | ரூ .88.6 கோடி |
ஆடம்பர கார்கள் – 4 | ரூ .5.1 கோடி |