ஷிகர் தவானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க வீரராகவும் முக்கிய வீரராகவும் திகழ்ந்து வருபவர் ஷிகர் தவான்.
இடது கை ஆட்டக்காரரான தவான் 17 வயது உட்பட்டவர்களுக்கான இந்திய அணி மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணி ஆகியவற்றில் சிறப்பாக விளையாடியதன் மூலம் முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் தவான் இடம்பிடித்தார்.
கடந்த 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் டெல்லி அணிக்காக முதல் தர கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான தவான் தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்தார்.
முதல்தர போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கடந்த 2010ஆம் வருடம் அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தவான் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். அதே போட்டியில் இந்திய அணிக்கு துவக்கம் கொடுக்கும் வாய்ப்பும் அவனுக்கு கிடைத்தது.
தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் படிப்படியாக வளர்ந்து வரும் தவான் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக ரன்கள் குவித்து அசத்தினார்.
தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து வைத்துள்ள தவான் கடந்த 2015 ஆம் வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணி முதல்முறையாக கோப்பையை வெல்ல தவான் உறுதுணையாக இருந்தார்.
கிரிக்கெட் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தவானின் சொத்து மதிப்பு மற்றும் ஆண்டு வருவாய் குறித்து இங்கு பார்ப்போம்.
சராசரி ஆண்டு வருமானம் | Rs.75.8 கோடி |
தனிப்பட்ட சொத்துக்கள் | Rs 32.5 கோடி |
சொந்தமான கார்கள்– 5 | Rs.9 கோடி |
ஐ.பி.எல் தொடரில் இருந்து கிடைக்கும் வருமானம் | Rs.4 கோடி |
விளம்பரம் தூதுவராக | Rs. 5.2 கோடி |
சம்பளம் | Rs.1 கோடி |
ஒருநாள் அணிக்கான சம்பளம் | Rs.3,00,000 |
டெஸ்ட் போட்டிகளுக்கான சம்பளம் | Rs.5,00,000 |
டி.20 போட்டிகளுக்கான சம்பளம் | Rs.2,00,000 |
குறிப்பு; இது சராசரியான கணக்கு மட்டுமே