நான் இன்னும் ஓய்வே சொல்லல… அதுக்குள்ள ஏன் அவசரபட்ரீங்க!! ரசிகர்களுக்கு செக் வைத்த கிரிஸ் கெய்ல்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட் போர்ட் ஆப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்றது. வழக்கமாக கிறிஸ் கெய்ல் ‘45’ எண் பொறித்த ஜெர்சிதான் அணிந்து விளையாடுவார். ஆனால் நேற்று ‘301’ எண் பொறித்த ஜெர்சியுடன் விளையாடினார். இது அவருக்கு போட்டி அவருக்கு 301-வது ஒருநாள் போட்டியாகும்.

இதனால் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.  நேற்றைய ஆட்டத்தில் 41 பந்தில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்து வெளியே செல்லும்போது இந்திய வீரர்கள் அவருக்கு சிறப்பான வகையில் வழியனுப்பி வைத்தனர். இதனால் நேற்று நடைபெற்றதுதான் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி என்று கருதப்பட்டது.

ஏற்கனவே உலகக் கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்று கூறப்பட்டது. பின்னர் அவருக்கு வழியனுப்பும் போட்டி ஒன்று நடத்தப்படும் என்றும் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடர், அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால் நான் எந்தவொரு ஓய்வு முடிவு குறித்தும் அறிவிக்கவில்லை என்று வீடியோ மூலம் கிறிஸ் கெய்ல் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து கிறிஸ் கெய்ல் அந்த வீடியோவில் ‘‘நான் எந்தவொரு ஓய்வையும் அறிவிக்கவில்லை. அடுத்த அறிவிப்பு வரும்வரை கிரிக்கெட்டில் வலம் வருவேன்’’ என்று தெரிவித்துள்ளார் 301 என்கிற எண்கள் பொறிக்கப்பட்ட உடையை அணிந்து விளையாடினார். ஆட்டமிழந்தபிறகு தன்னுடைய ஹெல்மெட்டை பேட்டில் வைத்தபடி நடையைக் கட்டினார். கெயிலுக்கு இந்திய கேப்டன் கோலியும் இதர இந்திய வீரர்களும் வாழ்த்து தெரிவித்தார்கள். இதனால் அதுவே அவருடைய கடைசி ஒருநாள் ஆட்டம் என எண்ணப்பட்டது. ஆனால் பேட்டியின் வழியாக அதை மறுத்துள்ளார் கெயில்..

இந்நிலையில்,

ஒருநாள் போட்டியில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் கெய்ல். இவர், 2015ல் கான்பெராவில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், 16 சிக்சர் பறக்கவிட்டார். தவிர இவர், இம்மைல்கல்லை எட்டிய சர்வதேச வீரர்கள் பட்டியலில் 2வது இடத்தை இந்தியாவின் ரோகித் சர்மா (16 சிக்சர்), தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (16) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்தின் இயான் மார்கன் (17 சிக்சர், எதிர்: ஆப்கானிஸ்தான், இடம்: மான்செஸ்டர், 2019) உள்ளார்.

 

ஒருநாள் போட்டியில் அதிக சதமடித்த விண்டீஸ் வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் உள்ளார் கெய்ல். இவர், 301 போட்டியில், 25 சதமடித்துள்ளார். இவரை அடுத்து லாரா (19 சதம்) உள்ளார். தவிர அதிக சதமடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 7வது இடத்தை டிவிலியர்ஸ் (தெ.ஆ.,), சங்ககரா (இலங்கை) ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் (49 சதம்) உள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.