பாப் டு ப்லெசிஸ் கேப்டன் பதவி பறிபோக உண்மையான காரணம் என்ன தெரியுமா?

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி நடந்து முடிந்த உலக கோப்பையில் படு தோல்வியைச் சந்தித்தது. இதனால் ரசிகர்களும் நிர்வாகத்தினரும் கடும் வேதனை அடைந்தனர். கொதிப்பில் இருந்த நிர்வாகம் அடுத்து நடைபெறும் போட்டிகளில் சிறப்பு வாய்ந்த அணியாக தென் ஆப்ரிக்கா அணியை கொண்டுவர பல அதிரடி மாற்றங்கள் செய்யப்படும் என அறிவித்தது.

அதன்படி அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் வீரர்கள் விசயத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதில் முதல் நடவடிக்கையாக டுபிளெசிஸ் டெஸ்ட் அணிக்கான கேப்டனாக செயல்படுவார் என்று அறிவித்தது.

South African cricket team captain Faf du Plessis tries to catch a shot by Sri Lankan cricketer Thisara Perera during the third One Day International (ODI) cricket match between Sri Lanka and South Africa at the Pallekele International Cricket Stadium in Pallekele on August 5, 2018. / AFP PHOTO / ISHARA S. KODIKARA

மேலும் T20 கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக இருந்த பேட்ஸ்மேன் குயின்டன் டி காக் கேப்டனாகவும், டஸ்சன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் டெஸ்ட் போட்டிக்கு டெம்பா பவுமா துணை கேப்டன் எனவும் அறிவித்தனர். அடுத்தடுத்து அணி வீரர்கள் மாற்றப்படுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் குழப்பமாக அமைந்தது.

அணி மாறுதல்களுடன் உலக கோப்பைக்கு பின் தென் ஆப்ரிக்கா முதலாவதாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்த தொடரில் T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் தென் ஆப்ரிக்கா மோதுகிறது. அந்த போட்டிகளில் குயின்டன் டி காக் கேப்டனாக செய்படுவார்.

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வாரியம் டுபிளெசிஸை ஓரங்கட்ட இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. நடந்து முடிந்த உலக கோப்பையில் தென் ஆப்பரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தும் என தெரிக்கப்பட்டது. ஆனால் லீக் தொடரிலேயே அணி வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாவே டுபிளெசிஸ் அணி தேர்வர்கள் பற்றியும், வீரர்கள் குறித்தும் தவறான கருத்துகளை வெளியிட்டு வந்தார். அதன் காரணமாகவே அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Sathish Kumar:

This website uses cookies.