வீடியோ: கையில் வெற்றி இருந்து ஆஸ்திரேலியா தோற்க காரண்ம் யார் தெரியுமா? விவரம் இதோ!

ஹெடிங்லே டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் மகா இன்னிங்சை ஆடியிருக்கலாம், ஆனால் அவருக்கு ஜோயெல் வில்சன் கடைசி நேரத்தில் பிளம்ப் எல்.பி.யை அவுட் தராதது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகி வருவதோடு, அதற்கு முன்பாக ஒரு ரிவியூவை டிம் பெய்ன் அண்ட் கம்பெனி விரயம் செய்ததால் இதற்கு ரிவியூ கேட்க முடியாமல் போனதும் விமர்சனங்களுக்கு ஆளானது.

வெற்றி பெற 2 ரன்கள் தேவை என்ற நிலையில் நேதன் லயன் அருமையான ஒரு ஓவரை வீசி பென் ஸ்டோக்சுக்கு நெருக்கடி அளித்தார். ஒரு கட்டத்தில் ஸ்டோக்ஸ் வாரிக்கொண்டு ஒரு ஸ்லாக் ஸ்வீப்பை ஆட முயல பந்து கால்காப்பைத் தாக்கியது, லயனும் ஆஸ்திரேலியர்களும் உயிர்போகுமாறு அப்பீல் செய்தனர், நடுவர் ஜோயெல் வில்சன் வாளாவிருந்தார். ஒருவேளை ரிவியூ இருந்து கேட்டிருந்தால் ஸ்டோக்ஸ் அவுட். ஆனால் உலகக்கோப்பையிலிருந்தே இங்கிலாந்தை தொடரும் அதிர்ஷ்டம், ஸ்டோக்ஸை தொடரும் அதிர்ஷ்டம் இங்கிலாந்துக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித்தந்துள்ளது.

வெற்றி பெற 5 ரன்கள் இருக்கும் போது கமின்ஸ் பந்து ஒன்றை ஜாக் லீச் கால்காப்பில் வாங்க அது முழுதும் லெக் ஸ்டம்புக்கு வெளியே சென்ற பந்து என்பது தெரிந்தும் ரிவ்யூ செய்து ஆஸி. அனாவசியமாக ரிவியூவை இழந்தது. மேலும் நேதன் லயன் ஒரு அருமையான ரன் அவுட் வாய்ப்பையும் தட்டுத்தடுமாறி கோட்டை விட்டார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் டி.ஆர்.எஸ்.-ஐ பயன்படுத்துவது குறித்து கூறும்போது, “இந்தத் தொடர் முழுதுமே டி.ஆர்.எஸ் அழைப்பில் மோசமாக இருந்து வருகிறோம். ரிவியூக்கள் பற்றி நாங்கள் இத்தனைக்கும் அதிகம் விவாதித்தோம். இங்கு கூட அதிகமாக இல்லை, லார்ட்ஸில் மிக மோசமாகப் பயன்படுத்தினோம், இன்னும் கொஞ்சம் கட்டுப்பாடு தேவை என்றே நினைக்கிறேன்.

பாட் கமின்ஸ் பந்தில் ஜாக் லீச்சுக்கு கேட்டது வேறு வழியற்ற நிலையில் கேட்டது போல்தான் இருந்தது, வேறு வழியில்லை இப்படி நடக்கவே செய்யும்.

ரிவியூக்கள் இருக்கிறது சரி, ஆனால் நடுவர்களும் இதைப் பொருட்படுத்தாது அவுட்டுக்கு அவுட் கொடுப்பதுதான் முறை என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் ஒன்றை அவுட் என்று நினைத்தால் அவுட் கொடுக்க வேண்டியதுதான். ரிவியூ சில வேளைகளில் நமக்கு சாதகமளிக்கும் சில வேளைகளில் அளிக்காது” என்றார் லாங்கர்.

ஆனால் கேப்டன் டிம் பெய்ன், “ஒட்டுமொத்த தொடரிலுமே நான் ரெஃபரலில் சரியாகக் கேட்டதாகத் தெரியவில்லை. ஆகவே நான் நடுவர்களைக் குறை கூற முடியாது. நம் கட்டுப்பாட்டில் உள்ளதை மட்டும்தான் நாம் கவனிக்க முடியுமே தவிர கட்டுப்பாட்டில் இல்லாத நடுவர் தீர்ப்புகளிலெல்லாம் கவனம் செலுத்த முடியாது.

நமக்கு வெற்றி பெற பிற வாய்ப்புகளும் இருந்தன என்பதே உண்மை. எனவே நடுவரைக் குறைகூறுவதில் பயனில்லை. அவரும் அனைவரையும் போலத்தான் தவறுகள் செய்வது இயல்பு” என்றார் டிம் பெய்ன்.

 

Sathish Kumar:

This website uses cookies.