இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் ஸ்டெயின் இடம் பெறாதது ஏன்? என்பது தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு விளக்கம் அளித்துள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சமீபத்தில் இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்றார்.
இந்நிலையில்தான் இந்தியாவுக்கு எதிரான டி20 அணி அறிவிக்கப்பட்டது. குயின்டன் டி காக் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயினுக்கு இடம் கிடைக்கவில்லை.
இதனால் ஸ்டெயின் அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தேர்வுக்குழுவினர் மீது மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார். ஸ்டெயின் குற்றச்சாட்டுக்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் பொறுப்பு இயக்குனர் கொர்ரி வான் ஜைல் பதில் அளித்துள்ளார்.
கொர்ரி வான் ஜைல் டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘மருத்துவ ரீதியாக அவர் இன்னும் தயாராகவில்லை. எங்களுடைய தகவல் மிகவும் தெளிவாக உள்ளது’’ என்றார்.
தென்ஆப்பிரிக்க டெஸ்ட் அணி:- பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), பவுமா, டி புருன், குயின்டான் டி காக், டீன் எல்கர், ஜூபைர் ஹம்சா, கேஷவ் மகராஜ், மார்க்ராம், செனுரன் முத்துசாமி, நிகிடி, அன்ரிச் நார்ஜே, வெரோன் பிலாண்டர், டேன் பிய்ட், காஜிசோ ரபடா, ருடி செகண்ட்.
தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணி: குயின்டான் டி காக் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், பவுமா, ஜூனியர் தலா, ஜோர்ன் போர்ச்சுன், பீரன் ஹென்ரிக்ஸ், ரீஜா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ஜே, பெலக்வாயோ, வெய்ன் பிரிட்டோரியஸ், ரபடா, தப்ரைஸ் ஷம்சி, ஜோன்-ஜோன் ஸ்மட்ஸ்.
இந்த தொடருக்கான தென்ஆப்பிரிக்க அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பாப் டு பிளிஸ்சிஸ் தொடருகிறார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ஜே, சுழற்பந்து வீசக்கூடிய ஆல்-ரவுண்டர் செனுரன் முத்துசாமி, விக்கெட் கீப்பர் ருடி செகண்ட் ஆகியோர் டெஸ்ட் அணிக்கு முதல்முறையாக அழைக்கப்பட்டுள்ளனர். இதன் துணை கேப்டன் பதவி பவுமாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த அணியில் பிளிஸ்சிஸ்சுக்கு இடமில்லை. அடுத்த உலக கோப்பை போட்டிக்கு அணியை தயார்படுத்தும் நோக்கில் 35 வயதான பிளிஸ்சிஸ் குறுகிய வடிவிலான போட்டியில் கழற்றி விடப்பட்டு இருக்கிறார்.