தோனி 2 மாத ஓய்வில் சென்றதற்கு யார் காரணம் தெரியுமா? இஸ்டத்திற்கு விளக்கம் கொடுக்கும் பிசிசிஐ !

இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், 3 டி-20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இத்தொடருக்கான வீரர்கள், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் நேற்று தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்வுக் குழு கூட்டத்தை பி.சி.சி.ஐ ஒத்திவைத்துள்ளது. நாளை வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் தோனி அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்வி பெரும் விவாதத்தை எழுப்பியது. அப்படியே அணியில் சேர்க்கப்பட்டாலும், இரண்டாம் கீப்பராக தான் இருப்பார் என்று பல்வேறு தகவல்கள் வந்தது. இந்நிலையில், இந்திய அணி நட்சத்திர வீரர் தோனி மேற்கிந்திய தீவுக்கு எதிரான அணியில் இடம்பெறமாட்டார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து பி.டி.ஐ நிறுவனத்திடம் பேசிய பி.சி.சி.ஐ அதிகாரி ஒருவர், எம்.எஸ் தோனி இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை. அவர் துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய இரண்டு மாத ஓய்வு எடுத்துள்ளார். இதுகுறித்து கேப்டன் விராட் கோலி மற்றும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் ஆகியோருக்கு அறிவித்துள்ளோம் என்றார். இரண்டு மாதம் ஓய்வு எடுக்கிறேன் என்று அவராகத்தான் வந்து எங்களிடம் கேட்டார். இந்த ஓவியத்தை அவர் மட்டுமே காரணம். நாங்கள் ஏதும் வற்புறுத்த வில்லை என அந்த பிசிசிஐ அதிகாரி விளக்கம் கொடுத்துள்ளார்

ஆனாலும் தோனியை கட்டாயப்படுத்தித்தான் சேர்ந்து மாதம் ஓய்வு பெற வைத்தார்கள் என ஒரு சில தகவல்கள் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது

ADELAIDE, AUSTRALIA – JANUARY 15: (L-R) Dinesh Karthik of India celebrates with MS Dhoni of India after deferating Australia during game two of the One Day International series between Australia and India at Adelaide Oval on January 15, 2019 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz/Getty Images)

எம்.எஸ்.தோனி இந்திய இராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. தோனி இடம்பெறாத பட்சத்தில் இந்திய அணியில் ரிஷப் பந்த் அல்லது இஷான் கிஷன் இடம்பெறுவார் என்று ஏதிர்ப்பார்க்கப்படுகிறது.

Sathish Kumar:

This website uses cookies.