இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து சர்ச்சைக்கு பெயர் போன சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பத்திரிகையாளர்களின் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக கடந்த 7 ஆண்டுகள் இருந்துவந்த விராட் கோலி, முதலில் உலக கோப்பை தொடருக்குப் பின் டி20 கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார்.மேலும் இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு தனது டெஸ்ட் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்தார். இதற்கு இடையில் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது.
தோனிக்கு பின் இந்திய அணியை வழி நடத்தக்கூடிய அனைத்து தகுதியும் விராட் கோலி இடம்தான் உள்ளது என்று கொடுக்கப்பட்ட கேப்டன் பதவி, பல சர்சையின் காரணமாக மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது.
விராட் கோலியிடம் இருந்த கேப்டன் பதவி ரோஹித் சர்மாவிற்கு கொடுக்கப்பட்டுள்ளதால், எதிர்கால இந்திய அணியின் நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்தும் விராட்கோலி கடந்து வந்த பாதை குறித்தும் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கிரிக்கெட் தொடர் குறித்து ஓபனாக பேசி வரும் இந்திய அணியின் கிரிக்கெட் விமர்சகர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், விராட் கோலியை தோனி கபில் தேவ் மற்றும் சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்களோடு ஒப்பிட முடியாது, மேற்கூறப்பட்ட வீரர்கள் இந்திய அணிக்காக பல தரமான சாதனைகளைப் படைத்துள்ளனர், விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்து இந்திய அணியை ஒரு உயர்ந்த இடத்தில் தான் வைத்திருந்தார்,ஆனால் அது எல்லாம் யார் கவனத்தையும் ஈர்க்காது ஆட்டத்தின் முடிவு என்ன என்பதை மட்டுமே அனைவரும் கருத்தில் கொள்வார்கள். விராட் கோலி இந்திய அணியை வழிநடத்தும் பொழுது எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் ஒருபொழுதும் விட்டுக் கொடுத்தது கிடையாது உதாரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவும் என்ற நிலை ஏற்பட்டபோதும் விராட்கோலி அந்த நிலையிலும் விட்டுக் கொடுக்காமல் சிறப்பாக செயல்பட்டார் என்று விராட் கோலி குறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.