கடந்த மார்ச் 23 அன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிறப்பாக நடைபெற்றது இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் வழக்கம்போல் பவுலிங்கை தேர்வு செய்தார், முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக செயல்பட்டு 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் அடித்தது.
இதனை செய்த இங்கிலாந்து அணி மிக அதிரடியாக விளையாடி போட்டி துவங்கியது இந்திய அணியின் இளம் வீரர் பிரஷீத் கிருஷ்ணா ஷர்துல் தாகூர் மற்றும் புவனேஸ்வர் குமார் வேகத்தில் சிக்கி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு காரணமாக கேஎல் ராகுல் மற்றும் குருனால் பாண்டிய தான் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர். கேஎல் ராகுல் மற்றும் பாண்டியாவின் ஜோடி இந்திய அணிக்காக 120 ரன்களை பெற்றுக் கொடுத்தது. இதில் கே எல் ராகுல் 43 பந்துகளில் 67 ரன்கள் அடித்து அசத்தினார் அதில் 4 போர்களும்,4 சிக்ஸ்களும் அடங்கும்.
அதேபோன்று குருனால் பாண்டியா 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து அசத்தினார் அதில் 7 போர்களும்,2 சிக்ஸ்களும் அடங்கும். கேஎல் ராகுல் சமீபமாக நடந்த இங்கிலாந்து மற்றும் இந்தியாவுக்கு இடையிலான டி20 போட்டியில் 4 போட்டிகள் பங்கேற்றார் ஆனால் இவர் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை மிகவும் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கே எல் ராகுல் அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்திய அணி 200 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்தது, இந்நிலையில் நானும் பாண்டியாவும் மிக அதிரடியாக விளையாடி இந்திய அணிக்காக ரன்களை குதித்தோம். இந்த அதிரடியான ஆட்டத்திற்கு காரணம் எங்களை சுதந்திரமாக விளையாட விட்டதுதான், எங்களை சுதந்திரமாக செயல்பட விட்டாள் எங்களால் அதிக போட்டிகள் சிறப்பாக விளையாட முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும் எங்களை எங்கள் வழியில் விட்டால் நாங்கள் இந்திய அணிக்காக 50 ஓவர்களில் 350 முதல் 360 ரன்களை பெற்றுக்கொடுப்போம் என்று தன்னம்பிக்கையுடன் கூறினார்.