இத மட்டும் செஞ்சுறுந்தா இவளோ பெரிய பிரட்சனை வந்திருக்காது, அறிவுரை வழங்கிய ஆகாஷ் சோப்ரா !!

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் விராட் கோலி கேப்டன் சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

தற்போது டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்துவரும் விராட் கோலி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சுற்றுப் பயணம் மேற்கொள்வதற்கு முன் ஒருநாள் தொடர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் மேலும் இந்திய அணியின் புதிய கேப்டனாக அதிரடி வீரர் ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு தெளிவான எந்த ஒரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று விராட் கோலி தெரிவித்த கருத்தை இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிசிசிஐ மற்றும் விராட்கோலி இடையில் நடக்கும் இந்த மோதல் போக்கு உடனடியாக நிற்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனலில் இந்த சர்ச்சை சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

அதில் பேசிய அவர்,இந்த பிரச்சனையை இன்னும் பக்குவமாக கையாண்டிருக்க வேண்டும், நீங்கள் இது சம்பந்தமாக தெளிவாக பேசி இருந்தாலும் அல்லது அவரிடம் கேட்டு இருந்தாலும் இந்த பிரச்சனை சுமூகமாக முடிந்து இருக்கும், கேப்டன் பதவியில் இருந்து நீக்குவது சம்பந்தமாக நீங்கள் யாரிடமும் கேட்க தேவையில்லை ஆனால் அது சம்பந்தப்பட்டவரிடம் நீங்கள் சரியான தகவலை தெரிவித்து இருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் பிரச்சனை பெரிதாக வளர்ந்து இருக்காது.

மேலும் பேசிய ஆகாஷ் சோப்ரா,விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது விராட் கோலிக்கு சுத்தமாக விருப்பம் கிடையாது ஆனால் இதை சரியான முறையில் அவரை அணுகி இருக்க வேண்டும், பிசிசிஐ மற்றும் விராட் கோலி இருவரும் சரியான முறையில் இந்த நிகழ்வை அணுகவில்லை, இதன்காரணமாகவே வதந்தியும் புரளியும் வேகமாக பரவி வருகிறது என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது

Mohamed:

This website uses cookies.