இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் எந்த வீரர் இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்துள்ளார்.
202 உலகக் கோப்பை தொடரின் முன்னேற்பாடாக ஒவ்வொரு அணியும் தங்களது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும் எந்த அணி பரிதாபமாக தோல்வி அடையும்,எந்த வீரர் சிறந்த முறையில் விளையாடுவார், எந்த வீரர் மேன் ஆப் தி மேட்ச் பட்டம் பெறுவோர், எந்த அணி இறுதிச்சுற்று வரை முன்னேறும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடத்தில் தற்பொழுது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் இந்திய அணி வீரர்கள் குறித்து தனது கருத்தை பேசியுள்ளார்.
அதில் பேசிய அவர், உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் பும்ரா இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய வீரராக திகழ்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது, என்னதான் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் வருன் சக்கரவர்த்தி இடம்பெற்றிருந்தாலும் இந்திய அணியின் வெற்றிக்கு பும்ராதான் ஆணிவேராக இருப்பார் என்று இர்பான் பதான் தெரிவித்தார்.
வருன் சக்கரவர்த்தி மிக சிறந்த முறையில் செயல்படுவார் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது, ஆனால் சூழ்நிலைகளையும் ரெக்கார்டுகளையும் வைத்து பார்க்கும் பொழுது இந்த உலகக் கோப்பைத் தொடரில் பும்ராதான் மாஸ் காட்டுவார் என்று இர்பான் பதான் தெரிவித்திருந்தார்.
மேலும் அதே நிகழ்ச்சியில் கௌதம் காம்பீர் பேசியதாவது, ரோகித் சர்மா கேஎல் ராகுல், வருன் சக்கரவர்த்தி போன்ற நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கிய காரணமாக இருப்பார் என்று இர்பான் பதான் கூரிய கருத்தையே காம்பிர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.