இன்றைய போட்டியில் அணியின் துவக்க வீரர் ஆடுவதில் சந்தேகம் என பிசியோ கூறியதால் பெருத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்தியா-விண்டீஸ் அணிகள் மோதிய டி20 2வது போட்டியில் பீல்டிங் செய்கையில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விண்டீஸ் அணியின் அதிரடி துவக்க வீரர் எவின் லீவிஸ் போட்டியில் இருந்து வெளியேறினார். 2வது போட்டியில் அவர் பேட்டிங் செய்யவில்லை.
3வது போட்டியில் காயம் குணமடையாததால் வெளியில் அமர்த்தப்பட்டு அவருக்கு பதிலாக நிகோலஸ் பூரான் உள்ளே எடுத்துவரப்பட்டதை நாம் அனைவரும் கண்டிருப்போம்.
இந்நிலையில், ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலும் லீவிஸ் களமிறக்கப்படவில்லை. அவருக்கு பதிலாக சுனில் அம்பரீஸ் உள்ளே ஆடினார். விண்டீஸ் அணி அபாரமாக வென்றது என்றாலும், நல்ல துவக்கம் அமையவில்லை.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் குணமடைந்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட்டது. ஆனால், காயம் குணமுடைய இன்னும் சில நாட்கள் எடுக்கும் என விண்டீஸ் அணியின் பிசியோ தெரிவித்ததால் இன்றைய போட்டியிலும் அவர் களமிறக்கப்படுவது சந்தேகம் தான்.
ஆதலால், இன்று விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் விண்டீஸ் அணி எவ்வித மாற்றமும் இன்றி களமிறங்கும் என தெரிகிறது. துவக்க வீரர் சாய் ஹோப் சென்ற போட்டியில் நிதானமாக ஆடி சதமடித்து அசத்தினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ஹெட்மயர் இந்திய பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 85 பந்துகளில் சதம் அடித்து வெற்றியை உறுதி செய்துவிட்டு ஆட்டமிழந்தார்.
இந்திய அணிக்கு முதல் இன்னிங்ஸ் நன்றாக அமைத்தாலும், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் அடுத்தடுத்து தவறுகளை செய்ததால் அணியால் தோல்வியை தவிர்க்க இயலவில்லை.
விசாகப்பட்டினம் மைதானத்தில் மீண்டும் இந்திய அணி வெற்றிப்பாதைக்கு திரும்புமா? என பொறுத்திருந்து காண்போம்.