தோனிக்கும் கோலிக்கும் என்ன பிரச்சனை? உண்மையாக பதில் கூறிய பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்

கேப்டன்சி தொடர்பாக விராட் கோலிக்கும், ரோகித் சர்மா இடையே போட்டியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக ரோகித் சர்மா இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க வேண்டும், அது கோலியின் சுமையைப் பெருமளவு குறைக்கும் எனப் பல கிரிக்கெட் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆகாஷ் சோப்ராவின் யூடியூப் சேனலுக்கு இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரும் பேட்டிங் பயிற்சியாளருமான சஞ்சய் பாங்கர் பேட்டியளித்துள்ளார். அதில் மனம் திறந்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துள்ளார்.

அதில் “இருவருமே சிறப்பான வீரர்கள். போட்டியின் நாளில் அது அவர்களுக்கான நாளாக அமைந்தால் இருவருமே சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றி பெற வைப்பவர்கள். எனக்குத் தெரிந்தவரை இருவருக்கும் எவ்விதமான போட்டியும் இல்லை. அவர்கள் இருவரும் தங்களது பொறுப்புகளில் கவனமாகவும் சிறப்பாகவும் தெளிவுடனும் செயலாற்றி வருகிறார்கள்” என்றார்.

மேலும் தொடர்ந்த சஞ்சய் பாங்கர் “ரோகித் சர்மாவுக்குத் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கும் வாய்ப்பு தாமதமாகவே கிடைத்தது. 2013க்கு பிறகே அவர் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அதற்கு முன்பு வரை 5,6,7 ஆவது பேட்ஸ்மேனாகவே களம் கண்டார். தொடக்கத்தில் வெளிநாடு ஆடுகளத்தில் விளையாடுவதற்கு மிகவும் சிரமப்பட்டார். பந்தை யூகிப்பதில் தடுமாறினார். ஆனால் இப்போது மிகச் சிறந்த வீரராக உருவாகியிருக்கிறார்” என்றார் அவர்.

கேரளாவில் யானைக்கு என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது என இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் வனப்பகுதிக்குள் இருந்த கர்ப்பிணி யானை ஒன்று பசிக்காக உணவு தேடி ஊருக்குள் புகுந்தது. அப்போது அப்பகுதி மக்கள் யானைக்கு உணவளித்தனர். இதில் சிலர் யானைக்குக் கொடுத்த அன்னாசிப் பழத்தில் வெடிமருந்தை வைத்துக் கொடுத்ததாகவும், அதனால்தான் யானை உயிரிழந்ததாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில்  அங்கு என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள  ‘இந்தியன் பிஸ்னஸ் டைம்’இந்திய வனத்துறை அதிகாரி ஏபி க்யூமை பேட்டி எடுத்து செய்தியாக வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து திரைத்துறை பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரோகித் சர்மா, அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நாம் காட்டுமிராண்டிகள். நாம் பாடம் கற்கவில்லையா? கேரளாவில் என்ன நடந்தது எனக் கேட்டு இதயமே வெடித்துவிட்டது. எந்த விலங்கையும் கொடுமைப்படுத்தும் தகுதி நமக்கு கிடையாது” எனக் கூறியுள்ளார்.

Sathish Kumar:

This website uses cookies.