2 உலகக்கோப்பை வாங்குன அணிக்கா நிலைமை… திறமையை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது.. ஒற்றுமை வேண்டும்! – வெஸ்ட் இண்டீஸ் அணியை வெளுத்து வாங்கிய முன்னாள் இந்திய வீரர்!

திறமை இருந்தால் மட்டும் போதாது அணிக்குள் ஒற்றுமையும் வேண்டும். அரசியலையும் தவிர்க்க வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது குறிப்பு கடுமையாக சாடியுள்ளார் வீரேந்திர சேவாக்.

உலகக்கோப்பை குவாலிபயர் போட்டிகள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது. தற்போது சூப்பர் சிக்ஸ் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ், ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, இலங்கை ஆகிய ஆறு அணிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு தகுதிபெற்றன.

சூப்பர் சிக்ஸ் சுற்றில் நேற்று நடைபெற்ற போட்டியில், ஸ்காட்லாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்து 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

182 ரன்கள் இலக்கை சேஸ் செய்த ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 185 ரன்களை அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகக்கோப்பைக்கு தகுதிபெறாமல் வெளியேறியது.

 

கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற 20-ஓவர் உலகக்கோப்பைக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறவில்லை. இப்போது 50-ஓவர் உலகக்கோப்பைக்கும் தகுதி பெறவில்லை. நாளுக்கு நாள் வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடு மோசமாக இருந்து வருவதோடு சர்வதேச கிரிக்கெட் தரத்திற்கு இல்லை என்கிற குற்றச்சாட்டு பல முன்னணி வீரர்களால் வைக்கப்பட்டு வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் செயல்பாடு குறித்து தங்களது விமர்சனங்களை முன் வைத்தனர். அந்த வகையில் கம்பீர் மற்றும் சேவாக் இருவரும் பேசியது கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

“இது மிகவும் அவமானகரமானது. வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கோப்பைக்கு முதன் முறையாக தகுதிபெற தவறியுள்ளது. இதன்மூலம் திறமை மட்டுமே போதாது. போட்டியில் கவனம் வேண்டும். நல்ல அணி நிர்வாகம் வேண்டும். அதோடு அரசியலுக்கு அப்பாற்பட்டு அணி நிர்வாகம் செயல்பட வேண்டும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இருக்கும் ஒரே ஆறுதல் இதற்கு மேல் அவர்கள் கீழே போவதற்கு ஒன்றும் இல்லை.” என்று சேவாக் பேசினார்.

கௌதம் கம்பீர் பேசியதாவது: “இன்னும் வெஸ்ட் இண்டீஸ் அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த வீழ்ச்சியிலிருந்து மேலே வருவார்கள். மீண்டும் நம்பர் ஒன் இடத்தையும் பிடிப்பார்கள். அணி ஒன்றாக செயல்படுங்கள். ஒற்றுமை மிகவும்.” முக்கியம் என்றார்.

Mohamed:

This website uses cookies.