தலைவன் தோனி மாதிரி வராது.. சத்தமே இல்லாம கேப்டன்ஷிப் என்கிட்ட கொடுத்துட்டு போயிட்டாரு; அப்போ என்கிட்ட தோனி ஒன்னு சொன்னாரு – விராட் கோலி கொடுத்த பேட்டி!

தோனி தனக்கு எப்படி கேப்டன் பொறுப்பை கொடுத்து சென்றார், அப்போது தன்னிடம் என்ன சொன்னார் என்பதை பற்றி சமீபத்திய பேட்டியில் மனம்திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.

இந்திய அணியின் கேப்டனாக தோனி இருந்த போது, 2008 ஆம் ஆண்டு அறிமுகமானார் விராட் கோலி. இவர்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்கிறது என்று பலமுறை நம்மால் பார்க்க முடிந்தது.

2014 ஆம் ஆண்டு தோனி டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு, அந்த பொறுப்பு விராட் கோலி இடம் சென்றது. 2017 ஆம் ஆண்டு அனைத்துவித போட்டிகளுக்கும் கேப்டனாக விராட் கோலி நியமிக்கப்பட்டார்.

2008 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 11 வருடங்கள் தோனியுடன் இந்திய அணியில் பயணித்துள்ளார் விராட் கோலி. இருவரின் கேப்டன் பொறுப்பும் முற்றிலும் மாறுபட்டது. தோனி நிதானமாகவும் பொறுமையுடனும் அணுகக்கூடியவர். விராட் கோலி ஆக்ரோசத்துடன் அதிரடியான அணுகுமுறை கொண்டவர்.

தோனி விட்டுச்சென்ற இடத்தை விராட் கோலி நன்றாக வழி நடத்தினார். ஆனால் தோனி போல கோப்பைகளை பெறவில்லை என்பதால் இவரை தோல்விகரமான கேப்டன் என்றுக்கூறி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள் பிசிசிஐ அதிகாரிகள். இதைப் பற்றி சமீபத்தில் பேட்டியில் பேசிய விராட் கோலி, தோனி எப்படி தனக்கு கேப்டன் பொறுப்பை கொடுத்து சென்றார்? அப்போது என்னென்ன கூறினார்? என்பதையும் பகிர்ந்து கொண்டார். விராட் கோலி கூறியதாவது:

“கிட்டத்தட்ட 2012 ஆம் ஆண்டிலிருந்து தோனி நான் கேப்டனாக வரவேண்டும் என்று பல்வேறு நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். தோனிக்கு நான் ஒரு வலது கையாகவே செயல்பட்டு வந்தேன். 2014ஆம் ஆண்டு எதுவுமே சொல்லாமல் கேப்டன் பொறுப்பிலிருந்து அமைதியாக விலக்கிக்கொண்டார்.

நான் தான் அடுத்த கேப்டனாக வர வேண்டும் என்று தோனி தான் முடிவு செய்தார். தேர்வு குழுவினர் என்னை நியமிக்கவில்லை. 23 வயதிலிருந்து அவருக்கு நான் துணை கேப்டன் ஆக இருந்திருக்கிறேன். அவரைப் பற்றி நான் நான்கு உணருவேன்.

இதேபோல் நான் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய போதும் பலரிடமும் எனது தொலைபேசி எண் இருந்தாலும், எனக்கு அழைத்துப் பேசிய ஒரே ஒருவர் தோனி மட்டுமே. அவர் என்னிடம் கூறியது ஒன்று மட்டும் தான். ‘வெற்றி தோல்விகளைப் பற்றி சிந்திக்க வேண்டாம், உன்னுடைய முழுமையான ஆட்டத்தை வெளிப்படுத்து, அணிக்கு என்ன தேவையோ அதை மட்டும் செயல்படுத்து.’என்றார். இன்றளவும் நான் அதை செய்து வருகிறேன். கேப்டனாக இருந்த போதும், பேட்ஸ்மேன் ஆக மட்டுமே இருக்கும்போதும் நான் அதை செய்து வருகிறேன்.” என்று விராட் கோலி பேசினார்.

Mohamed:

This website uses cookies.