இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்.. அது விராட்கோலி, ரோகித் இல்லை – கடுமையாக விமர்சித்த ஆஸ்திரேலிய ஜாம்பவான்!
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் இவர்கள் மட்டுமே, தற்போது இருக்கும் ரோகித் சர்மா, விராட்கோலி இல்லை என சர்ச்சையான கருத்தை முன்வைத்துள்ளார் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல்.
இந்தியாவின் முந்தைய காலகட்ட முன்னணி பேட்ஸ்மேன்களான சச்சின்–கங்குலி இருவரும் ஜோடி சேர்ந்து 176 இன்னிங்சில், 26 சதம், 29 அரைசதம் என மொத்தம 8227 ரன்கள் குவித்தனர். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த ஜோடி என்ற சாதனையை படைத்தது.
சச்சின்-கங்குலி சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்தியாவின் தற்போதைய பேட்ஸ்மேன்களான விராத் கோஹ்லி மற்றும் ரோகித் சர்மா ஜோடிக்கு உள்ளது. இவர்கள் இருவரும் ஜோடி சேர்ந்து இதுவரை 79 இன்னிங்சில், 17 சதம், 16 அரைசதம் என 4741 ரன்கள் குவித்துள்ளனர்.
இந்நிலையில், விராட்கோலி மற்றும் ரோகித் சர்மா இருவர் குறித்தும் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் சேப்பல்,
“ஒருநாள் போட்டியில், தற்போது தலைசிறந்த இந்திய பேட்ஸ்மேன்களாக விராத் கோஹ்லி, ரோகித் சர்மா இருவரும் இருப்பதாக கருத்துக்கள் வருகின்றன. இருப்பினும் இந்தியாவின் முன்னாள் வீரர்கள் சச்சின், கங்குலி தான் உண்மையான சவால்களை சந்தித்துள்ளனர்.
இவர்கள் 15 ஆண்டுகளாக உலகின் தலைசிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ரன்களை குவித்தனர். இவர்களை போல உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சை கோஹ்லி, ரோகித் இருப்பது எதிர்கொண்டார்களா? என்பது சந்தேகம் தான்.
சச்சின், கங்குலி விளையாடிய காலத்தில் எதிரணியில் குறைந்தபட்சம் இரண்டு சிறந்த பவுலர்கள் இடம் பெற்றிருப்பர். துவக்க ஜோடியாக களமிறங்கிய இவர்கள், திறமையான வேகப்பந்துவீச்சை சமாளித்து ரன் சேர்த்துள்ளனர். இதன் அடிப்படையிலேயே ரோகித், கோஹ்லியை விட சச்சின்-கங்குலி சிறந்தவர்கள் என நான் கருதுகிறேன்” என்றார்.