ஜெயிக்கனும்னா இந்த இரண்டு பேர்ல ஒருத்தருக்காவது வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் தினேஷ் கார்த்திக் !!

இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் என்ன என்பது குறித்தான தனது கருத்தை தினேஷ் கார்த்திக் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை (21ம் தேதி) நடைபெற உள்ளது.

இரண்டாவது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டி என்பதால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த போட்டி மீதான தங்களது எதிர்பார்ப்பை முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். அதே போல் இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா தென் அபரிக்கா இடையேயான ஒருநாள் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் இந்திய அணியின் சீனியர் வீரரான தினேஷ் கார்த்திக், இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், பும்ரா – புவனேஷ்வர் குமார் ஆகிய இருவரில் ஒருவரை நீக்கிவிட்டு பிரசித் கிருஷ்ணா -முகமது சிராஜ் ஆகிய இருவரில் ஒருவரை கண்டிப்பாக சேர்க்கவேண்டும். பும்ராவை நீக்குவதா அல்லது புவனேஷ்வர் குமாரை நீக்குவதா என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். பிரசித் கிருஷ்ணாவும் சிராஜும் நல்ல வேகமாக வீசக்கூடியவர்கள். எனவே மிடில் ஓவர்களில் அவர்களது வேகம் அணிக்கு பயனளிக்கும். முதல் போட்டியில் அதுதான் மிஸ் ஆனது. அதனால் 2வது ஒருநாள் போட்டியில் அவர்கள் இருவரில் ஒருவரை கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கருத்து கூறியுள்ளார்.

Mohamed:

This website uses cookies.