ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தவறு செய்துவிட்டார்கள் அவர்களும் மனிதர்கள் தானே அவர்களை மன்னித்து சிறந்தது என்று அவர்களுக்கு கை கொடுத்து உள்ளார் இந்தியாவின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும், முன்னணி வீரர் கே.எல்.ராகுலும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பெண்களின் வாழ்க்கை முறை குறித்தும், இனவெறியைத் தூண்டும் வகையிலும் பதிலளித்தனர்.
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா.
இதற்கு கடுமையான விமர்சனங்கள் வந்ததை அடுத்து, தனது தவறுக்கு ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். இந்த விவகாரம் குறித்து ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
‘காபி வித் கரண்’ நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியா. (Twitter)
இதனை அடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த விவகாரத்தில், முதற்கட்டமாக இருவருக்கும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல்.ராகுல். (ICC)
இதனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒரு நாள் அணியில் ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் ஆகியோர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன், உடனடியாக நாடு திரும்புமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ரசிகர்களை தவிர்த்த ஹர்திக் பாண்டியா
இந்நிலையில், பிரபல தனியாா் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஹா்திக் பாண்டியா, தற்போது அந்த ஒப்பந்தத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அடிமேல் அடி விழுவதால் ஹர்திக் பாண்டியா மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.