சிஎஸ்கே பிளே-ஆப் போறது டவுட்டு தான்… அப்படியே போகணும்னா அதுக்கு ஒரே வழி.. இது நடந்தே ஆகணும் – முன்னாள் இந்திய வீரர் கணிப்பு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு பிரபலமானது. ஆனால் இந்த வருடம் சிஎஸ்கே பிளே-ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இதுதான் என்று கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இதுவரை விளையாடிய 13 சீசன்களில் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு சென்றிருக்கிறது. 9 முறை இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறது. அதில் நான்கு முறை கோப்பைகளையும் வென்றுள்ளது.

மத்த எந்த அணிகளிலும் இல்லாத அளவிற்கு ஒரு சிறப்பு என்னவென்றால் முதல் சீசனில் இருந்து வரவிருக்கும் 16ஆவது சீசன் வரை அனைத்து சீசன்களிலும் ஒரு அணிக்கு இதுவரை கேப்டன் மாறாமல் இருந்தது சிஎஸ்கே அணியில் மட்டும்தான். இந்த வருடம் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி வருடம் என கூறப்படுகிறது.

ஆகையால் சிஎஸ்கே அணி இந்த வருடம் பிளே-ஆப் சுற்றுக்கு சென்று இறுதிப்போட்டியில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவர்கள் மத்தியிலும் இருக்கிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த வருடம் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால், அதற்கு இவை அனைத்தும் நடக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

“சிஎஸ்கே வீரர்களின் பட்டியலை பார்க்கையில் சிறப்பாக இருக்கிறது. தோனி கேப்டனாக இருக்கிறார். அதுவும் உணர்வுபூர்வமாக ஒன்றியுள்ளது. மேலும் தோனிக்கு கடைசி வருடம் என்றும் கூறப்படுகிறது. மேலும் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை மைதானம் சிஎஸ்கே அணியின் கோட்டை. அங்கு அவர்களது முழு திறமையை வெளிப்படுத்தி விளையாடினால் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறலாம்.

சிஎஸ்கே அணியின் பலமே அவர்களது ஆல்ரவுண்டர்கள் தான். சிவம் டுபே, மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், டிவைன் பிரிட்டோரியஸ், மிட்ச்சல் சான்ட்னர் உட்பட இன்னும் சில இளம் ஆல்ரவுன்ட் வீரர்களும் இருக்கின்றனர். மற்ற அணிகளில் இல்லாத அளவிற்கு ஆல்ரவுண்டர்களை நல்ல முறையில் வைத்திருக்கின்றனர். இவர்களை முறையாக பயன்படுத்தினால் சிஎஸ்கே அணியை எவராலும் நெருங்க இயலாது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.