என்னதான் ஆச்சு இந்திய அணிக்கு..? அவுங்க விளையாடுறத பார்த்தா எனக்கே கடுப்பாகுது; இயன் மோர்கன் விமர்ச்சனம் !!

என்னதான் ஆச்சு இந்திய அணிக்கு..? அவுங்க விளையாடுறத பார்த்தா எனக்கே கடுப்பாகுது; இயன் மோர்கன் விமர்ச்சனம்

உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் எந்த ஒரு திட்டமும் இல்லாமல் இந்திய அணி விளையாடியதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன் விமர்சித்துள்ளார்.

இருதரப்பு, முத்தரப்பு போட்டிகளில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி ஐசிசி நடத்தும் போட்டிகளில் சோதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதையே வழக்கமாக வைத்துள்ளது. குறிப்பாக நடைபெற்று முடிந்த 2022 உலகக்கோப்பை தொடரில்,இந்திய அணி அரை இறுதி சுற்று வரை முன்னேறினாலும் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி தன்னுடைய சொதப்பலான ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது.

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணம் இந்திய அணியின் மோசமான திட்டம் தான் என பெரும்பாலான கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். தொடர் முடிவு பெற்று மாதங்கள் கடந்தாலும், இன்னும் இந்திய அணி ஒட்டுமொத்த கிரிக்கெட் வட்டத்திலும் விமர்சிக்கப்பட்ட தான் வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மார்கன்., இந்திய அணி முக்கியமான போட்டியில் கூட எந்த ஒரு திட்டமும் இல்லாமல் விளையாடியது என விமர்சித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து இயான் மார்கன் பேசுகையில்,“என்னை பொறுத்த வரையில் எந்த ஒரு முக்கியமான போட்டியிலும் எதிரணியை முதலிலிருந்தே ஆதிக்கம் செலுத்த வேண்டும். நேர்மையாக சொன்னாள் இந்திய அணி ஆரம்பத்திபிருந்து முடிவு வரை இங்கிலாந்து அணியின் ஆதிக்கத்தில் தான் இருந்தது. இங்கிலாந்து அணி செய்தது போல் அடுத்தடுத்து தரமான அடிகளை இந்திய அணி கொடுத்திருக்க வேண்டும். இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லரின் கேப்டன்ஷிப் உண்மையில் சிறப்பாக இருந்தது, மொத்தத்தில் ஜாஸ் பட்லர் பயன்படுத்திய யுத்தி மற்றும் திட்டங்கள் மிகவும் சிறப்பாக இருந்தது, இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி இந்திய அணியின் திட்டத்தை முறியடித்து விட்டது. இங்கிலாந்து மற்றும் இந்திய இடையில் நடைபெற்ற போட்டியை வைத்து பார்க்கையில் இந்திய அணியிடம் எந்தவொரு மாற்றுதிட்டமும் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது. நாங்கள் போட்டியை பார்க்கும் பொழுது ஏன் இந்திய அணி இவ்வாறு விளையாடுகிறது என பேசிக்கொண்டு இருந்தோம்” எனவும் இயான் மார்கன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.