அண்டர் 19 அணியில் சிறப்பாக ஆடிய ரிஷப் பன்ட், ஐபில் போட்டியில் டெல்லி அணிக்காக ஆடினார். சிறப்பாக ஆடிய இவர் இந்திய ஏ அணியிலும் இடம் பெற்றார். தற்போது பாலிவுட் நடிகரின் மகள் இவர் மீது விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
21 வயதாகும் ரிஷப் பன்ட் சென்ற ஐபில் போட்டியில் சிறப்பாக ஆடி, 14 போட்டிகளில் ஆடிய அவர் 684 ரன்கள் குவித்தார். இது சீசனில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இவரது சராசரி 52.62 ஆகும், மேலும் ஸ்ட்ரைக் ரேட் 173.60. இவர் ஒரு பேட்டியில் கூறுகையில் நான் பார்க்கிறேன் கணிக்கிறேன் அடிக்கிறேன் என்கிற பாணியில் கூறினார்.
இந்த சீசனில் இவருக்கு எமெர்ஜிங் பிளேயர் விருதும் வழங்கப்பட்டது. இந்த அதிரடியால் இந்திய ஏ அணியிலும் தேர்வாகி இங்கிலாந்து சென்றுள்ளார். மேலும், அதிக பவுண்டரிகள் அடித்தவர் என்ற பெருமையும் இவரையே சேரும். இவருக்கு பல பக்கமிருந்தும் பாராட்டுகள் வந்தாலும். இந்தியா மெய்ன் அணியில் இடம் பெறவில்லை என்ற வருத்தம் இவருக்கு இருந்து தான் வருகிறது.
பாலிவுட் நடிகையுடன் நட்பு
பிரபல பாலிவுட் நடிகரான சைப் அலி கான் மகள் சாரா அலி கான் இவரின் மீது எனக்கு விருப்பம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாகவே செல்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. இருவருக்குள் கா
தலும் மலர்ந்துள்ளது எனவும் பரவலாக பேசப்படுகிறது.
சாரா விரைவில் பாலிவுட் படத்தில் அறிமுகம் ஆகா போகிறார் என சைப் அலி கான்.