சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் களத்தில் 24 ஆண்டுகளாக பல எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். தற்போது வரை அவரது பல சாதனைகளை முறியடிக்க படாமலேயே இருக்கிறது.
நான் அந்த மைதானத்தில் பேட் செய்து கொண்டிருந்தபோது, திடீரென புழுதிப்புயல் வந்துவிட்டது. புழுதிப்புயல் சூழ்நிலையில் நான் இதுவரை விளையாடியதில்லை. இதனால் எனக்கு பயம் வந்துவிட்டது.புயல் நம்மை தூக்கி சென்று விடும் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.
22 வருடத்திற்கு முன்பு நான் ஷார்ஜாவில் அடித்த இரு சதங்கள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. அது மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நான் போட்ட சதங்கள் ஆகும். ஒன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுத்த 143 ரன்கள்.
முதல் சதம் போட்ட போட்டி நாங்கள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது நடந்தது. எனவே அந்த சதமும் விசேஷமானதுதான். என்னைப் பொறுத்தவரை இரண்டுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வந்த சதங்கள். எனவே இரண்டுமே நல்ல ஸ்கோர். ஆனால் இதை விட சுவாரஸ்யம் இந்தப் போட்டியில் இருந்தது. அதை நான் சொல்லியாக வேண்டும் என்றும் சச்சின் தெரிவித்துள்ளார்.
நான் ஒல்லியாக இருப்பேன் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நம்மை புயல் தாக்கினால் அருகில் விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருக்கும் ஆடம் கில்கிறிஸ்ட்டை இறுக கட்டிப் பிடித்துக் கொள்வோம். அப்படி செய்தால் எங்களது இருவரின் எடையையும் புயலால் தூக்கி விட முடியாது. கீழேயும் விழமாட்டோம் என்று நினைத்துக்கொண்டே நான் கில்கிறிஸ்ட் பக்கம் போய் நின்று கொண்டேன்.
நல்லவேளையாக நடுவர் புயல் வருவதற்கு முன்னதாகவே போட்டியை நிறுத்திவிட்டார் நடுவர் இதனால் நாங்கள் தப்பித்து விட்டோம். அதனைத் தொடர்ந்து இலக்கு குறைக்கப்பட்டு அந்த போட்டியை தொடர்ந்து ஆடினோம் என்று கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். சச்சினின் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.