உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சினை கொண்ட ஆக்ரோஷமான் அணி இதுதான்: முன்னாள் வீரர் கிரேம் ஸ்வான் பேச்சு
இந்திய அணி பேட்டிங்கிற்கு பெயர் போனது. ஆனால் சமீபகாலமாக பந்துவீச்சில் ஆக்ரோஷமாக விளையாடி வருகிறது. விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்ற பின்னர் இந்திய அணி பந்து வீச்சின் மூலம் அதிகம் வெற்றி பெற்றுள்ளதை நாம் பார்த்திருப்போம்.
முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் உருவாகி விட்டனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சில் இந்தியா முன்னேற்றம் அடைந்துள்ளது. சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் என்பது கூட இரண்டு போட்டிகளில் 40 விக்கெட்டுக்கு 33 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர் இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான்..
.அவர் கூறுகையில் தற்போது இருக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு எந்த உலக அணியின் பேட்டிங் கையும் தகற்கக்கூடிய வல்லமை படைத்தது. அவர்கள் நம்ப முடியாத வகையில் பந்துவீசி வருகின்றனர்.
அதுவும் கடந்த இரண்டு வருடங்களாக ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, இஷாந்த் ,ஷர்மா உமேஷ் யாதவ் போன்றோர் பேட்ஸ்மேன்களுக்கு ஒரு கெட்ட கனவாக இருந்து வருகின்றனர் .
2018ஆம் ஆண்டு மட்டும் ஜஸ்பிரித் பும்ரா,இஷாந்த் ஷர்மா மற்றும் முகமது சமி ஆகிய இருவரும் சேர்ந்து 135 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் இவர்கள் தான் தற்போதைய உலகின் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் என்று கூறியுள்ளார்.