இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர தனது ட்விட்டர் வலைதளத்தில் பல பதிவுகளை பதிவிடுவார். அவரது பழைய பதிவுகளை எடுத்து அது தற்போது நடைபெற்று வருகிறது என்று பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதை பகிர்வார்கள். 2019 உலகக்கோப்பை தொடரில் அவர் அதிக அளவில் பேசப்பட்டார்.
அன்றில் இருந்து அவரது பழைய பதிவுகளை தினந்தோறும் ரசிகர்கள் தேடிப்பிடித்து எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருவார்கள். அதில் ஒரு பதிவை தற்பொழுது அவர்கள் எடுத்து பகிர்ந்து இருக்கிறார்கள். அந்த பதிவில் இந்திய ஓபனிங் வீரர் ரோஹித் சர்மாவை திட்டித் தீர்த்திருக்கிறார் ஜோஃப்ரா ஆர்ச்சர்.
முட்டாள்தனமான செயல்படாதீர்கள் ரோஹித் சர்மா
2014ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மே 25ம் தேதி அன்று மோதியது. அன்றைய போட்டியில் மிகப் பெரிய வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். எனவே நிதானமாக மும்பை விளையாடியாக வேண்டும் என்கிற நிலைமையில் இருந்தது.
டாஸ் வென்று ரோகித் சர்மா முதலில் ராஜஸ்தான் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். சிறப்பாக விளையாடிய சஞ்சு சாம்சன் மற்றும் ஷேன் வாட்சன் முதல் விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிக் கொண்டிருந்த வேளையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் தனது ட்விட்டர் வலைதளத்தில் முட்டாள்தனமாக செயல்படுகிறார் ரோகித் சர்மா என்பதுபோல் பதிவிட்டிருந்தார்.பழைய பதிவு என்றாலும் தற்பொழுது அது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜோஃப்ரா ஆர்ச்சர் கூறியது போல அன்றைய போட்டியில் ரோகித் சர்மா தவறுதலான முடிவை எடுக்கவில்லை. பின்னர் பேட்டிங் விளையாடிய மும்பை அணி மிகப் பெரிய வெற்றி அடைந்தது. குறிப்பாக கடைசி பந்தில் ஆதித்ய தாரே சிக்ஸர் அடித்து மும்பை அணியை எலிமினேட்டர் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். பின்னர் எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணி சென்னை அணியிடம் தோல்வி பெற்றது குறிப்பிடத்தக்கது.