சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் வெல்ல சாஸ்திரி & கவாஸ்கர் தான் காரணம்

ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் 124 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தானுடன் 54க்கு 5 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

பக்கர் ஜமான் அடித்த சதத்தால் பாகிஸ்தான் அணி 338 என வலுவான ஸ்கோரை அடித்தது. அந்த இலக்கை துரத்திய இந்திய அணி 158 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பாராத விதமாக விளையாடியது. தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற அணிகளை வீழ்த்தி, சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியையும் வீழ்த்தி கோப்பையை வென்றது பாகிஸ்தான்.

சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற முன்னாள் இந்திய கிரிக்கெட்டர்கள் ரவி சாஸ்திரி மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பதாக தகவல் வந்தது, இதனால் ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற முடியாது என சாஸ்திரி மற்றும் கவாஸ்கர் கூறியது தான் பாகிஸ்தான் வெற்றி பெற காரணம் என பாகிஸ்தான் அணியின் மேனேஜர் தெரிவித்தார்.

“இறுதி போட்டியில் இந்தியா எங்களிடம் மோதவிருந்தது. கவாஸ்கர் மற்றும் சாஸ்திரி பேசியதை பார்த்தோம், அவர்களை வீழ்த்த முடியாது என கூறினார்கள். இது தான் எங்கள் வீரர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தியது. பேட் மற்றும் பந்தும் பேசட்டும் என நாங்கள் விட்டுவிட்டோம். எங்களுக்கு லக் இருந்தது. இந்திய அணி டாஸ் வென்று எங்களுக்கு பேட்டிங்கை தந்தார்கள். ஒரு நல்ல ஸ்கோரை அடித்துவிட்டு, அவர்களை பந்துவீச்சில் நெருக்கடி கொடுக்கலாம் என பிளான் வைத்திருந்தோம்,” என அலி மாலிக் கூறினார்.

“இந்தியா – பாகிஸ்தான் அணி விளையாடினால் டிவி ரேட்டிங் அதிகரிக்கும். கால்பந்து போட்டிகள் தான் முதல் இடத்தில் இருந்தது. அதே போட்டி பாகிஸ்தான் அல்லது இந்தியாவில் நடந்திருந்தால் டிவி பார்வையாளர்கள் அதிகமாக இருந்திருப்பார்கள். நாங்கள் தொடர்ந்து விளையாடுவோம் என நம்புகிறோம். இருதரப்பு தொடர் மீண்டும் விளையாட காத்திருக்கிறோம்,” என மாலிக் மேலும் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.