இது புதுசு இல்ல ! கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த போட்டிகளின் பட்டியல் !

 இது புதுசு இல்ல ! கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணி குறைந்த ரன்களில் ஆட்டமிழந்த போட்டிகளின் பட்டியல் !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அடிலெய்ட் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு அருகில் இருந்த இந்திய அணி திடீரென ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 36 ரன்களில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் படு மோசமாக தோல்வி அடைந்தது. கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கிரிக்கெட் உலகத்திற்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்திய அணியின் கடந்த இருபது வருடங்களில் இது போல் இந்திய அணியில் பலமுறை “சடன் கொலாப்ஸ்” இருக்கிறது அந்த போட்டிகளின் பட்டியலை தற்போது பார்ப்போம்.

100 ரன்களில் மும்பையில் ஆல் அவுட்

கடந்த 2000ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இந்த தொடரில் 2வது டெஸ்ட் போட்டி மார்ச் மாதம் நடைபெற்ற இந்த போட்டியில் 2-வது ஆட்டத்தில் இந்திய அணி 100 ரன்களில் ஆட்டமிழந்து 212 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணைக்கு ராகுல் டிராவிட் கேப்டனாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேமில்டனில் 99 ரன்கள்

2002ஆம் ஆண்டு இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. அப்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெறும் 99 ரன்கள் மட்டுமே எடுத்து மூன்றாவது நாளிலேயே தோல்வி அடைந்திருக்கிறது.

இங்கிலாந்தில் 148 ரன்கள்

2017 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் வெறும் 148 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இருந்தது. இந்த போட்டியில் இந்திய அணி 224 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

அகமதாபாத்தில் 76 ரன்கள்

2008ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா இந்தியாவிற்கு வந்து விளையாடியது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு மோசமாக தோல்வி அடைந்தது. அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் ஆட்டத்தில் வெறும் 76 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மண்ணைக் கவ்வியது. இதே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 90 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Prabhu Soundar:

This website uses cookies.