இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா வெற்றிகரமான இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான ரவிசாஸ்திரியை புகழ்ந்து கூறியுள்ளார்.
2017 இல் இந்திய அணியின் நிரந்தர தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை பிசிசிஐ நிர்ணயித்தது. அன்று தொடங்கி இன்று வரை இந்திய அணி மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவித்து கொண்டுள்ளது. இவரின் தலைமையில் 2018/19 ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறை டெஸ்ட் போட்டி தொடரை வெற்றி பெற்றது, பல சீனியர் வீரர்கள் இல்லாத போதும் இந்திய அணி இளம் வீரர்களை கொண்டு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார சாதனை படைத்தது. இதனால் இந்திய அணி எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் ஒரு அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது,இதற்கு முக்கிய காரணம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தான் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
இந்த அணி நிச்சயம் கோலி உடையது தான் ஆனால் அதை மேற்பார்வையிடுவது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தான். இவர் வீரர்களின் மனநிலையை அறிந்து அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கி அவர்களை மனதளவில் பக்குவப்படுத்துவதில் மிகச் சிறப்பாக செயல்படுவார். மேலும் கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணி இவரின் பயிற்சியின் கீழ் மிக சிறப்பாக செயல்பட்டு பல வெற்றிகளை குவித்துள்ளது என்று பாராட்டினார்.
மேலும் ரவி சாஸ்திரி குறித்து கூறிய அவர் ரவி சாஸ்திரி இதுவரை இந்திய அணிக்காக 50 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 150 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று மிகச் சிறப்பாக விளையாடி உள்ளார். இவர் விளையாடிய காலகட்டத்தில் இவர் தனக்கென ஒரு தனி சிறப்பம்சத்தோடு செயல்படுவதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
இவர் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்படுவார், எந்த ஷார்ட் எப்பொழுது அடிக்க வேண்டும் என்று இவருக்கு நன்றாகவே தெரியும், மேலும் கேப்டன்ஷிப்பில் ஆக்ரோஷமாக செயல்பட்டு பல முறை வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் இவர் எந்த ஒரு நிலையிலும் பின்வாங்க மாட்டார் என்று அஜய் ஜடேஜா ரவிசாஸ்திரி பற்றி கிரிக்பஸ்சுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.